துபாய், ஜூலை 31- துபா யில் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்பட்ட உலகின் மிக ஆழமான நீச்சல் குளத்தில் இங்கி லாந்து நாட்டின் கடற் படை வீரர்கள் ஆழம் வரை சென்று பயிற்சி செய்தனர்.
துபாயில் நாத் அல் செபா பகுதி அருகே உல கின் மிக ஆழமான நீச்சல் குளம் அமைக்கப்பட்டு உள்ளது. டீப் டைவ் என்ற நிறுவனம் இந்த நீச்சல் குளத்தை அமைத் துள்ளது. இந்த நீச்சல் குளம் மொத்தம் 197 அடி (60 மீட்டர்) ஆழம் கொண்டது ஆகும்.ஒலிம் பிக் நீச்சல் குளத்தை போன்று சுமார் 6 மடங்கு அளவுள்ள இந்த ஆழ மான நீச்சல் குளத்தில் ஹைப்பர் பேரிக் என்ற பகுதி உள்ளது. இதில் ஒரு நகரம் தண்ணீரில் மூழ்கி யது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். நீச்சல் குளத்தில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங் களுடன் பழைய பணி மனை போன்ற அமைப்பு பங்கேற்பாளர்களை வெகுவாக கவருவதாக உள்ளது.
‘ஸ்கூபா டைவ்’ எனப் படும் நீர்மூழ்கி வீரர்கள் பயிற்சி பெறுவதற்கும் வசதி செய்து தரப்பட்டு உள்ளது. இதில் இங்கி லாந்து நாட்டின் கடற் படையின் டைவிங் வீரர் கள் குழு தலைவர் லியாம் புல்மேன் மற்றும் டைவிங் அதிகாரி கல்லும் கிளார்க் ஆகியோர் ஆழமான நீச்சல் குளத்திற்கு வருகை புரிந்தனர். துபாயில் உள்ள ஜெபல் அலி துறை முகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள எச்.எம்.எஸ். சோர் ஹம் என்ற இங்கிலாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இவர்கள் வந்தனர்.4 நாட்கள் ஜெபல் அலி துறைமுகத்தில் நிறுத்தப் படும் இந்த கப்பலில் மொத்தம் 40 கடற்படை வீரர்கள் உள்ளனர். துபா யில் ஆழமான நீச்சல் குளம் திறக்கப்பட்டது பற்றி அறிந்த லியாம் புல்மேன் மற்றும் கல்லும் கிளார்க் ஆகியோர் தாங் கள் பயிற்சி பெற்று பார்ப் பதற்காக அங்கு சென் றனர்.
அவர்களுக்கு தேவை யான உபகரணங்கள் அளிக்கப்பட்டு நீச்சல் குளத்தின் அடியில் ஆழ மான பகுதி வரை சென்று வந்தனர்.பிறகு தாங்கள் கொண்டு வந்த இங்கி லாந்து நாட்டின் ராயல் கடற்படையின் கொடியை பிடித்து ஒளிப் படம் எடுத்துக் கொண் டனர்.ஆழமான பகுதி யில் இருவரும் சதுரங்க விளையாட்டில் ஈடுபட் டனர். இந்த நீச்சல் குளம் டைவிங் வீரர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என இருவரும் உற்சாக மாக கூறினர்.தொடர்ந்து பொதுமக்கள் பலரும் இந்த நீச்சல் குளத்திற்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.
No comments:
Post a Comment