தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவரும் திமுக அரசு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவரும் திமுக அரசு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்

சென்னை, ஜூலை 17- அரசு போக்குவரத்து கழக பணி யாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, இந்த திட்டத்தை அமல்படுத்த போக்குவரத்துக்கழக நிர்வாகி களின் முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தர விட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர் களின் எண்ணிக்கை, தொகையை கணக்கிட்டு உடனே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை மாற்றி, கடந்த 2003ஆம் ஆண்டு முதல் புதிய ஓய்வூதிய திட்டம் வகுக்கப்பட்டது. இதையடுத்து, திமுக தேர்தல் வாக் குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக தலைவர் மு.. ஸ்டாலின் தமிழ்நாடு முதல்-அமைச்ச ராக பொறுப்பேற்றுதும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களின் நீண்ட கால கோரிக்கையான புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் ஆய்வறிக்கை தமிழ்நாடு அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், போக்குவரத்துக்கழக நிர்வாகிகளின் முன்மொழிவை அனுப்ப தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக் கைக்கு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒப்பந்தபுள்ளிகளுக்கான வைப்புத் தொகை இணையம் மூலம் மட்டுமே செலுத்தப்பட வேண்டும்

சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, ஜூலை 17- பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தங்கள் கோரப்படும் பொழுது அதற்கான முன் வைப்பு தொகை (EMD) இணையம் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், மணலி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட ஒப்பந்த பணிக்காக இணையம் மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டு முன்வைப்பு தொகையும் இணையம் வழி பெறப்பட்டது. இதற்கிடையே  குறிப்பிட்ட ஒப்பந்த பணிக்கான முன்வைப்பு தொகை (EMD) நேரடியாக மண்டலத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட செயற்பொறியாளரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.     இதுகுறித்து புகார்கள் மாநகராட்சி யின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

 ஒப்பந்தங்கள் கோரும்போது  பெட்டி வைத்து நேரடியாக முன்வைப்பு தொகை பெறுவது கூடாது எனவும், இணையம் மூலம் மட்டுமே பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்ட ஆணையை மீறி செயல்பட்ட மணலி மண்டலத்தின் செயற்பொறியாளர் கட்டாய காத்தி ருப்பில் வைக்கப்பட்டுள்ளார்.  மேலும், மணலி மண்டலத் தில் கோரப்பட்ட குறிப்பிட்ட அந்த ஒப்பந்தம் ரத்து செய் யப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகராட்சியின் சார்பில் விரி வான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.

விழுப்புரம், ராமநாதபுரத்தில்

கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள்

சென்னை, ஜூலை 17- விழுப்புரம், ராமநாதபுரத்தில் ரூ.3,539 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணி களை விரைவில் தொடங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை திட்டங்கள், பராமரிக்கப்பட்டு வரும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மற்றும் ஆய்வில் உள்ள புதியகுடிநீர் மற்றும் பாதாள சாக்கடைதிட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செயலாக்கத்தில் உள்ள 51 குடிநீர் மற்றும் 19 பாதாளசாக்கடை திட்டப் பணிகளை வேகமாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பராமரிப்பில் உள்ள 557 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக் களுக்கு சீரான முறையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.1,502.72 கோடி மதிப்பிலும், ராமநாதபுரம் மாவட்டம் குதிரைமொழியில் ரூ.2,036.83 கோடி மதிப்பிலும் தலா 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பணிகளை விரைவாக தொடங்கவேண்டும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் தின் மூலம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட புதிய திட்டங்களுக்கு திட்ட மதிப்பீட்டைவிரைவாக தயாரிக்க வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment