சிறு விசிறிகளால் ஆன காற்றாலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

சிறு விசிறிகளால் ஆன காற்றாலை!

கடலில் மிதக்கும் காற்று மின்னாலைத் துறையில் போட்டிகள் வலுக்கின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்றவை தங்கள் கடற்கரையிலிருந்து சில காத துரத்தில் பெரிய காற்றாலைகளை நிறுவி, 'பசுமை' மின் உற்பத்தியை அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், நார்வேயின் 'விண்ட் கேட்ச்சர் சிஸ்டம்ஸ்' ஒரு புதுமையான கடல் மிதவைக் காற்றாலையை அறிமுகப்படுத்துகிறது. மூன்று அல்லது நான்கு விசிறிகளைக் கொண்ட காற்றாலைக்குப் பதிலாக, விண்ட் கேட்ச்சரின் கண்டுபிடிப்பு 117 சிறிய விசிறிகளைக் கொண்டுள்ளது. கடலில் ஒரே இடத்தில் மிதக்கும் இந்த அமைப்பின் உயரம் 1000 அடி. உலகின் மிகப் பெரிய காற்றுமின் மிதவை ஆலையை விட, ஆண்டுக்கு அய்ந்து மடங்கு அதிக மின் உற்பத்தியை விண்ட் கேட்ச்சர் அமைப்பால் தரமுடியும். அதாவது 80 ஆயிரம் அய்ரோப்பிய வீடுகளின் மின்சாரத் தேவையை, ஒரே ஒரு விண்ட் கேட்ச்சர் அமைப்பு நிறைவேற்றிவிடும். வழக்கமான காற்றாலையின் ஒரு விசிறி அல்லது மின் ஜெனரேட்டர் பழுதானாலும் அதன் மொத்த செயல்பாடும் நின்றுவிடும். ஆனால், விண்ட் கேட்ச்சரின் 117 சிறு விசிறிகளில் சிலது பழுதானாலும், மற்றவை தொடர்ந்து மின்சார உற்பத்தியை தொடரும்.தவிர விண்ட் கேட்ச்சரின் பராமரிப்பும் எளியது.

No comments:

Post a Comment