டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கோவிஷீல்டு கரோனா தடுப்பூசி போட்டவர் களுக்கு கிரீன் பாஸ் தர சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்லோவேனியா, கிரீஸ், அய்ஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட ஒன்பது அய்ரோப்பிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
* கரோனா தொற்று மூலம் உலக அளவில் இலவச பொது சுகாதார நலத்திற்கான தேவை முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவில் சுகாதாரக் கட்டமைப்புக்கு முன்னுரிமை இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.வி.ரமணா கூறியுள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மய்யத்தை தமிழ் நாடு அரசு எடுத்து நடத்திட அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு இன்றளவும் ஒன்றிய அரசில் இருந்து பதில் இல்லை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிற்படுத்தப்பட்டோர் பற்றி கண்ட றிந்து அறிவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என ஒன்றிய அரசின் 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றம் 5.5.2021 அன்று அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்திட முடியாது என ஒன்றிய அரசின் மறு ஆய்வு மனுவுக்கு பதிலளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தி டெலிகிராப்:
* குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித் ததற்காக தேச விரோத குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அசாம் சட்டமன்ற உறுப்பினர் அகில் கோகாய் மீது எந்த குற்றமும் இல்லை என தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்து அவரை விடுதலை செய்துள்ளது..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment