மலேசியா திராவிடர் கழக முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் மு.சு. மணியம் மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

மலேசியா திராவிடர் கழக முன்னாள் பொதுச் செயலாளர் தோழர் மு.சு. மணியம் மறைவு

கழகத் தலைவர் இரங்கல்

மலேசிய திராவிடர் கழகத்தின் கிள்ளான் பகுதியின் சிறந்த செயல் வீரராக, பல ஆண்டுகள் கழகத்தின் அமைப்புச் செயலாளர், பொதுச் செய லாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த கொள்கை வீரர் மானமிகு தோழர் மு.சு. மணியம் (வயது 84) நேற்று (15.7.2021) இயற்கையெய்தினார் என்று அறிந்து மிகவும் வருத்தமும், துயரமும் அடைகிறோம். 

மலேசிய திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர் தோழர் அண்ணாமலை அவர்கள் நமக்குத் தகவல் அறிவித்தார்.

பல முறை அவருடன் நாம் பழகியுள்ளோம். அவர் சிறந்த கொள்கை வீரர் என்பது மட்டுமல்ல; சிறந்த பண்பாளர்; எவரிடத்திலும் அன்போடு பழகும் பான் மையாளர்; தமிழ் நாட்டுக்கும் வந்து சென்றவராவார்.

அவரது அருமைச் செல்வன்,  இயக்கப் பணியில் ஈடு பட்டுள்ள கொள்கை வீரர் தோழர் சு. அறிவாணன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், மலேசிய திராவிடர் கழகத் தோழர்களுக்கும், பெரியார் பற்றாளர்களான கொள்கைக் குடும்பத்தினர் அனை வருக்கும் நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலேசிய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர்

திரு. பொன்வாசகம் தலைமையில் இறுதி நிகழ்ச்சி பகுத்தறிவு முறைப்படி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

அவருக்கு தமிழ்நாடு திராவிடர் கழகம் சார்பில் நமது வீர வணக்கம்.


கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம் 

சென்னை       

16.7.2021    

No comments:

Post a Comment