மருத்துவமனை டீன் தகவல்
சேலம், ஜூலை 1- சேலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன குடல் உள் நோக்கு கருவிகள் மூலம் குடல், கணையம், கல்லீ ரல் சார்ந்த புற்றுநோய் கள், பித்தநாள கற்கள், கணைய கற்களுக்கு உல கத் தரம் வாய்ந்த மருத் துவ முறையில் சிகிச்சை அளிக்கப்படும் என மருத் துவமனை டீன் தெரிவித் துள்ளார்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் நடைபெற்ற நவீன கருவிகள் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு, மருத் துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி தலைமை வகித்து, குடல், கணையம், கல்லீரல் சார்ந்த அறுவை சிகிச்சை மற்றும் புற்று நோய் சிகிச்சை பிரிவுக ளுக்கான அதிநவீன குடல் உள்நோக்கு கருவிகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார். துறை தலை வர்கள் சிவசங்கர், பால முரளி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
பின்னர் டீன் வள்ளி சத்தியமூர்த்தி கூறியதா வது:
நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம், குடல், கணையம், கல்லீரல் சார்ந்த புற்றுநோய்கள், பித்தநாள கற்கள், கணைய கற்களுக்கு உலகத் தரம் வாய்ந்த மருத்துவமுறை யில் சிகிச்சை அளிக்க முடியும்.
மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல் எடை குறைதல், மலத்தில் ரத்தக் கசிவு போன்ற அறிகுறி கள் ஏற்பட்டால், நோயா ளிகள் சேலம் அரசு மருத் துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
இச்சிகிச்சையை நாமக்கல், ஈரோடு, தரும புரி, கிருஷ்ணகிரி, கள்ளக் குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்ட மக்கள் பயன் பெறும் வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்தி உள்ளது. இக்கருவிகளின் மூலம் உயரிய அறுவை சிகிச்சை களை மற்றும் மருத்துவ சிகிச்சை முதலமைச்சரின் விரி வான மருத்துவக் காப்பீட் டுத்திட்டத்தின் மூலம் மக்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment