சுயமரியாதைத் திருமணம் பற்றி ஹார்ட் கிரேவ் ஜுனியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

சுயமரியாதைத் திருமணம் பற்றி ஹார்ட் கிரேவ் ஜுனியர்

திராவிடர் இயக்கம் பற்றி எழுதிய ஹார்ட் கிரேவ் ஜூனியர் என்னும் அமெரிக்கர் சுயமரியாதை திருமணங்கள் பற்றி இவ்வாறு கூறுகிறார்:-

"திராவிடர் கழகத்தினரால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதைத் திருமணம் என்னும் சீர்திருத்தத் திருமணங்கள் தமிழ்நாடெங்குமுள்ள பார்ப்பனரல்லாத சமூகத்தினரிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இத்திருமணங்களில் புரோகிதரோ, இந்துமதச் சடங்கு களோ சேர்க்கப்படுவதில்லை. திருமணத்திற்கு வந்துள்ள பிரமுகர்களில் ஜாதி வேறுபாடு ஏதுமின்றி யாராவது ஒருவர் தலைமை வகித்து அனைவர் முன்னிலும் உள்ள புதிய தம்பதிகளின் வாழ்க்கை ஒப்பந்தத்தை முடித்து வைப்பார். அவர் புது வாழ்க்கையில் ஈடுபடும் தம்பதிகளை மாலை மாற்றிக்கொள்ளச் செய்வார்"

- ஹார்ட் கிரேவ் ஜூனியர்

The Dravidian Movement, பக்கம் - 29

No comments:

Post a Comment