மரத்தில் ஒரு செயற்கைக்கோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

மரத்தில் ஒரு செயற்கைக்கோள்

மரக்கட்டை ஒரு சாதாரண பொருள். செயற்கைக்கோள், உயர்தொழில்நுட்ப வகையைச் சேர்ந்தது. இந்த இரண்டையும் இணைத்திருக்கிறது .எஸ்.., எனப்படும் அய்ரோப்பிய விண்வெளி முகமை.'வுட்சாட்' என்ற பெயரில், ஒரு நேனோ செயற்கைக்கோளை, 2022ன் இறுதிக்குள் .எஸ்.., விண்ணில் ஏவும்.

எல்லாப் புறமும் 10 செ.மீ., அளவு கொண்ட வுட்சாட், 'கியூப்சாட்' என்ற குட்டி செயற்கைக்கோள் வகையைச் சேர்ந்தது.பிர்ச் மரத்தால் ஆன பிளைவுட் பலகைகளை வைத்து வுட்சாட்டின் வெளிப்புறத்தை வடிவமைத்துள்ளனர்.

பூமியிலிருந்து 600 கி.மீ., தள்ளி விண்வெளியில் மிதக்கும் இந்த பலகைகள் சூரிய கதிர்வீச்சு உள்ளிட்ட காரணி களால் பாதிக்கப்படாமல் இருக்க, சில சிறப்பு பதப்படுத்தல்களை விஞ்ஞானிகள் செய்துள்ளனர். பலகைகளை இணைக்க அலுமினிய தகடுகளை பயன்படுத்தியுள்ளனர்.

இதன் வெளி நீட்சியாக ஒரு அலுமினிய கரம் உள்ளது. அதில், உலகின் முதல் நேனோ செயற்கைக்கோள், 'செல்பி கேமரா' பொருத்தப்படும். வுட்சாட்டை வடிவமைத்தவர், பின்லாந்தை சேர்ந்த அறிவியல் பத்திரிகையாளரான ஜாரி மாகினன். இவர், 'ஆர்க்டிக் அஸ்ட்ரோனாட்ஸ்' என்ற செயற்கைக்கோள் மாதிரி பொம்மைகளை விற்கும் தொழிலையும் செய்கிறார்.

எனவே, மரக்கட்டையில் செயற்கைக் கோள் என்று வித்தியாச மாக சிந்தித்து, அதை .அய்.., விஞ்ஞானிகளை ஏற்கவும் வைத்திருக்கிறார். .அய்..,வின் அறிவியல்பரிசோதனைகளை செய்வ தற்காக, பல உணரிகளை சுமந்து, விரைவில் விண்வெளிக்கு செல்லும் வுட்சாட்.

No comments:

Post a Comment