டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேசத் துரோக சட்டம் நமது நாட்டுக்கு இப்போது தேவைதானா? அப்படி என்றால், நாட்டில் இன்னும் அடக்குமுறைகள் உள்ளதா?, இதனால், கேள்வி சுதந்திரம் என்பது பறிக்கப்படாதா? இதனை அரசுகள் ஏன் கருத்தில் கொள்ளவில்லை? குறிப்பாக, சுதந்திரத்திற்காக போராடிய காந்தியார், திலகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் எல்லாம் கைது செய்ய பயன்படுத்தப்பட்ட இந்த சட்டத்தை இன்னும் நடைமுறையில் வைத்திருப்பது வேதனை அளிக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதும், இதுபோன்ற சட்டத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து பயன்படுத்துவது ஏன் என்பதை நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை, என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா காட்டமாக தெரிவித்தார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· அரசியல் ரீதியாக சக்திவாய்ந்த ஜாதியினரின் பின்தங்கியலின் சிக்கலான கூற்றுகளை எவ்வாறு எதிர்கொள்வது? மூன்றாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சிறந்த பணியாக இருக்கும். ஆனால், அதற்கு நாம் தயாரா? என பத்திரிக்கையாளர் சுகாஸ் பல்சிகார் கேள்வி எழுப்பியுள்ளார்.
· மகாராட்டிராவில் இட ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பாக ஒன்றிய அரசிடம் தரவுகளைப் பெற அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் பணியில் அரசின் உணவு அமைச்சர் ஜக்கன் பூஜ்பால், பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்தார்.
தி டெலிகிராப்:
· மிருகத்தனமான பாலியல் வன்முறைகள், கொலைகள், சமீபத்திய வாக்கெடுப்புக்கு பிந்தைய வன்முறை மற்றும் கோவிட் மரணங்கள் ஆகியவற்றால் உத்தரப்பிரதேச முதல்வரின் ஆட்சி ‘ஒரு இனப்படுகொலைக்கு குறையாதது’ என அலகாபாத் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்ட யோகி தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு, கரோனா தடுப்பில் சிறந்து விளங்குகிறது என பிரதமர் மோடி புகழாராம் சூட்டினார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
· நீட் நகர்ப்புற பணக்காரர்களுக்கு பயன் அளிப்பதாக நீட் தாக்கம் குறித்து அமைக்கப்பட்ட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு தகவல்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment