முட்டைக் கொள்முதலில் முறைகேடு எடியூரப்பாமீது சித்தராமையா குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

முட்டைக் கொள்முதலில் முறைகேடு எடியூரப்பாமீது சித்தராமையா குற்றச்சாட்டு

பெங்களூரு, ஜூலை 31 எடியூரப்பா கருநாடக முதல்வர் பதவியிலிருந்து விலகுவதற்கு 3 நாள்களுக்கு முன்புகூட முட்டைக்  கொள்முதலில் ஊழல் நடந்துள்ளதாக சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கருநாடக சட்டப் பேரவைத் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா, ‘பாஜக அரசின் 2 ஆண்டு ஊழல்கள்என்ற பெயரில் கையேடுஒன்றை வெளியிட்டு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கருநாடகத்தில் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தால் அமைந்தது தான் பாஜக அரசு. கடந்த 2 ஆண்டுகளில் ஊழல் மற்றும் தவறான ஆட்சி நிர்வாகம்தான் எடியூரப்பாவின் சாதனை. அவர் பதவி விலகுவதற்கு 3 நாள்களுக்கு முன்புகூட ஏழைக் குழந்தை களுக்கு வழங்கப்படும் முட்டை கொள் முதலில் ஊழல் நடந்துள்ளது. பாஜக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே, தங்கள் கட்சி ஆட்சியின் மீது ஊழல் புகார்களை கூறுகிறார்கள். அமைச்சர்களின் ஊழல்கள் குறித்து அந்தந்தத் துறை ஊழியர் களே எனக்கு கடிதங்களை எழுதுகின்றனர்.

இந்நிலையில்தான், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க-முதலமைச்சரை மாற்றி அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திவிடலாம் என்று பாஜக மேலிடம் கருதுவது போல் தெரிகிறது. கரோனா 3 ஆவது அலை குழந்தைகளை தாக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில் ஏழை குழந்தை களுக்கு வழங்க மேற்கொள்ளப் பட்ட முட்டை கொள்முதலில் ஊழல் செய்துள்ளனர். கரோனா காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்வதிலும் ஊழல் செய்தவர் கள்தான் பாஜக-வினர். குறுகிய கால திட்ட பணிகளுக்கு டெண்டர் விடும் முன்பே 10 சதவிகித கமிஷன் பெறுகின்றனர்.

இவ்வாறு சித்தராமையா விமர்சித்துள்ளார்.

No comments:

Post a Comment