வாசிங்டன், ஜூலை 31- அணு ஆயுதத் திறனை மேம்படுத்துவ தற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை செயற் கைக்கோள் படங்கள் அம்பலப் படுத்தி உள்ளன. இதுகுறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது.
உலகின் இரு பெரும் வல்ல ரசு நாடுகளான அமெரிக்கா வுக்கும், சீனாவுக்கும் இடையே தீராப்பகை நிலவி வருகிறது. ஏற்கெனவே இரு நாடுகளும், ஒன்றுக்கு எதிராக மற்றொன்று கடுமையான வரிகளை விதித்து வர்த்தகப்போரில் ஈடுபட்டு உலக அரங்கை அதிர வைத்தன.இப்போது கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு பின்னர் இரு தரப்பு உறவு மேலும் மோசமாகி உள்ளது. கரோனா வைரசை உகான் நக ரில் உள்ள பரிசோதனைக் கூடத்தில் சீனா உருவாக்கி கசிய விட்டுள்ளதாக அமெ ரிக்கா சந்தேகிக்கிறது. இது பற்றி உளவு அமைப்புகள் விசா ரித்து அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் சீனா இந்த குற்றச் சாட்டை மறுத்து வருகிறது.
இந்த தருணத்தில் சீனா அணு ஆயுத திறனை மேம் படுத்த அதிரடியாக களம் இறங்கி உள்ளது. சீனாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சின்ஜியாங் மாகாணத்தின் மேலிருந்து எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சீனா அணு ஏவுகணைகளை ஏவுகிற தளத்தினை கட்டமைக் கும் பணியில் ஈடுபட்டுள்ளதை காட்டுவதாக எப்.ஏ.எஸ். என்று அழைக்கப்படுகிற அமெரிக்க விஞ்ஞானிகள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு சீனாவில் கடந்த 2 மாதங்களில் அந்த நாடு கட்டு கிற இரண்டாவது அணு ஏவு கணை தளம் இது என கூறப் படுகிறது. இந்த ஏவுதளத்தில் ஏவுகணைகளை சேமித்து வைப்பதற்கும், ஏவுவதற்கும் வசதியாக 110 குழிகள் இருப் பதாகவும் தெரிய வந்துள்ளது.கடந்த மாதம் சீனாவின் கான்சு மாகாணத்தில் யுமென் என்ற பாலைவன பகுதியில் சீனா இப்படி 120 குழிகளை அமைத் துள்ளதாக அமெரிக்காவின் ‘தி வாசிங்டன் போஸ்ட்’ பத்தி ரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.அதைத் தொடர்ந்து இப்போது சீனா கட்டமைத்து வருகிற அணு ஏவுகணை ஏவுதளம், யுமெனுக்கு வட மேற்கில் 380 கி.மீ. தொலைவில் ஹாமி என்ற இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்ட கன், சீனா தனது அணு ஆயு தங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்துவதற்கு தயாராகி வருவதாக தெரிவித்தது. சீனா கடந்த ஆண்டு 200-க்கும் மேற்பட்ட அணு குண்டுகளை குவித்துள்ளதாக வும், அதை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டிருப்பதா கவும் பென்டகன் அப்போது கூறியது நினைவுகூரத்தக்கது. அமெரிக்காவும், ரசியாவும் ஆயுதக் கட்டுப்பாடு பற்றி பேச தயாராகி வருகிற நிலையில், சீனா அணு ஆயுத திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதைக் காட்டுகிற செயற்கைக்கோள் படங்களும், தகவல்களும் அதிர வைக்கின் றன. சீனா ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பாக எந்தப் பேச்சிலும் அங்கம் வகிக்கவில்லை.
சீனா அணு ஆயுதத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித் துள்ளது. இது பற்றி அமெரிக்க பாதுகாப்பு துறையின் அங்க மான அமெரிக்க மூலோபாய கட்டளை மய்யம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “2 மாதங் களில் இரண்டாவது முறை யாக சீனா அணு ஏவுகணை தளத்தினை அமைக்கும் நட வடிக்கையில் இறங்கி உள்ளது. இது உலகுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது” என கூறி உள்ளது.
No comments:
Post a Comment