சென்னை, ஜூலை 31 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 9 இடங்களில் அங்காடிகள், வணிக வளாகங்கள் செயல்பட இன்று (31.7.2021) முதல் அனுமதி இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகை யில் ஊரடங்கு 09.08.2021 வரை கூடுதலாக எவ்விதத் தளர்வுகளும் இன்றி நீடிக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் அறிவித்துள்ளார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கரோனா தொற்று பாது காப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர் பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை காவல் துறை ஆணையா ளர் சங்கர் ஜிவால் ஆகி யோர் தலைமையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் அலுவல கத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பெரு நகர சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண் டறியப்பட்டுள்ள ரங்க நாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை, புரசை வாக்கம் டவுட்டன் சந் திப்பு முதல் புருக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என். எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்க சாலை சந்திப்பு வரை, இராயபுரம் மார்க்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை அமைந்த கரை மார்க்கெட் பகுதி யில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மய்யம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை ஆகிய பகுதி களில் உள்ள வணிகவளா கங்கள் மற்றும் அங்காடி கள் நாளை 31-07-2021 (சனிக்கிழமை) முதல் 09.082021 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை.
மேலும், கொத்தவால் சாவடி மார்க்கெட் 01-08-2021 (ஞாயிற்று கிழமை) முதல் 09.08.2021 (திங்கட் கிழமை) காலை 6.00 மணி வரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. எனவே, வணிகர்கள் மேற்குறிப் பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை நடை முறைப்படுத்த மாநக ராட்சி மற்றும் காவல் துறையின் மேற்குறிப் பிட்ட நடவடிக்கைக ளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment