புதுடில்லி, ஜூலை 31- கோவிட்-19 பெருந்தொற் றால் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் 91 சதவீத நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதாக ஒன்றிய அமைச்சர் நாராயண் ரானே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் நாராயண் ரானே எழுத்துப்பூர்வ மாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளுக்கு ஏராள மான நிவாரணங்களை அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கு ஆதரவளிப்பதற்காக, குறிப்பாக கோவிட்- 19 பெருந்தொற்று சூழலில் பல்வேறு முன்முயற்சி களை அரசு மேற்கொண் டுள்ளது.
அதன்படி, இந்த நிறு வனங்களுக்கு ரூ. 20,000 கோடி துணைக் கடனாக வழங்கப்படுகிறது. வர்த்த கங்களுக்கு இணை இல வச கடனாக ரூ. 3 லட்சம் கோடி அளிக்கப்படுகிறது. எளிதான வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக ‘உதயம் முன்பதிவின்' மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு வனங்களின் புதிய முன் பதிவு மேற் கொள்ளப்படு கிறது. ரூ. 200 கோடி வரை கொள்முதல் செய் வதற்கு பன்னாட்டு ஒப் பந்தம் தேவையில்லை.
புலம்பெயர் தொழி லாளர்கள் உள்ளிட்ட மக்களுக்கு, வேளாண்மை மற்றும் ஊரகத் தொழில் களில் வேலை வாய்ப்பு வழங்குவதை ஊக்குவிப்ப தற்காக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் வாயிலாக அமைச்சகம் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி 17.15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 214495 பிரிவுகளை அமைப்பதற்காக பிரதம ரின் வேலைவாய்ப்பு உரு வாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டு களில் ரூ. 6209.62 கோடி மானியம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பிரி வுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக தொழில் நுட்பம், நிதி மற்றும் சந்தை நிபுணர்களின் வாயிலாக ஆதரவு அளிக்கப் படுகிறது. சிறப்பாக செயல்படும் பிரிவுகளைத் தரம் உயர்த்துவதற்காக 15 முதல் 20% வரையி லான மானியத்துடன் ரூ. 1.0 கோடி வரை இரண் டாம் நிலை கடன் வழங் கப்படுகிறது. பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக் கும் திட்டம் மற்றும் இதர காதி மற்றும் கிரா மத் தொழில்துறை பொருட் களை இணையதளம் வாயிலாக சந்தைப் படுத்துவ தற்காக மின்னணு வர்த் தகத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது.
கோவிட்-19 பெருந் தொற்றால் அறிவிக்கப் பட்ட பொதுமுடக்கத் தால், பிற துறைகளைப் போல குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவ னங்கள் துறையும் பாதிப்பை சந்தித்தது. பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் நிறுவப் பட்டுள்ள நிறுவனங்கள் உள்ளிட்ட இந்த துறை களைச் சேர்ந்த நிறுவ னங்களின் மீது பெருந் தொற்றின் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்வதற்கு தேசிய சிறு தொழில்கள் கழகம் மற்றும் காதி மற்றும் கிராமத் தொழில் கள் ஆணையம் ஆய்வு களை மேற்கொண்டன.
இதன் முடிவுகளின் படி 91 விழுக்காடு நிறு வனங்கள் தொடர்ந்து இயங்குவது தெரிய வந் தது. பணப்புழக்கம் (55 விழுக்காடு நிறுவனங் கள்), புதிய வர்த்தகம் (17 விழுக்காடு நிறுவனங் கள்), தொழிலாளர் (9 விழுக்காடு நிறுவனங் கள்), தளவாடங்கள் (12 விழுக்காடு நிறுவனங்கள்) மற்றும் கச்சாப்பொரு ளின் இருப்பு (8 விழுக்காடு நிறுவனங்கள்) ஆகியவை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்ட 5 முக்கிய சவால்களாகும். கடந்த ஆண்டு பிரதமர் துவக்கி வைத்த ‘சாம்பியன்ஸ்’ என்ற இணையதளத்தின் வாயிலாக 25.7.2021 வரை 35,983 குறைகள் தீர்க்கப் பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment