சூழியல் பேரிடரை எதிர்கொள்வோம்! - 6 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

சூழியல் பேரிடரை எதிர்கொள்வோம்! - 6

 முதியோர்சொல்லும், முதுநெல்லிக்கனியும்

பேராசிரியர்

அரசு செல்லையா

மேரிலாந்து பல்கலைக்கழகம், பால்டிமோர், அமெரிக்கா

றிவில் முதிர்ந்தோர் சொல்லும் அறிவுரைகள், கேட்கவோ கடைப்பிடிக்கவோ எளிதாக இருக்காது. ஆனால் காலம் செல்லச் செல்ல சரியானது என்று உணரப்படும். ‘முதியோர் சொல்லும் முதுநெல்லிக்கனியும் முன்புளித்து பின் இனிக்கும்என்னும் முதுமொழி சொல்லு வதும் இதைத்தானே?.

மூன்று மூத்த அறிஞர்கள் பல ஆண்டு களாகச் சொல்லி வந்த அறிவுரைகள் ஏற் கப்படாததால், உலகம் பெரும் அவலத்து உள்ளாகி இருப்பதை இக்கட்டுரையில் காண்போம்.

1) Robert Webster – Viral Immunologist

முதலில் ராபர்ட் வெப்ஸ்டர் என்னும் வைரஸ் தடுப்பாற் றல் இயல் வல்லுந ரைப் பற்றி சில:

88 வயதை தாண் டிய இந்த ஆய்வாளர், பல ஆண்டுகளாகச் சொல்லி வந்தது  வைரஸ் பேரிடர் உலகை தாக்குவது நிச்சயம். எப்போது என்பது தான் கேள்வி. 2018ஆம் ஆண்டு வெளி வந்த  என்ற அவரது புத்தகத்திலும்அதையே வலியுறுத் துகிறார். அவரது எச்சரிக்கைக்கு முக்கியம் கொடுத்து; உலகளாவிய அளவில் ஆய்வா ளர்கள், தடுப்பூசி நிறுவனங்கள், அரசாங் கங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டிருந் தால் நிச்சயம் கோவிட் பேரிடரை முளை யிலேயே கிள்ளி எறிந் திருக்கலாம். இவ் வளவு பெரிய உயிரிழப்புகளும், வாழ் வாதாரச் சிதைவுகளும், மருத் துவக் கட்ட மைப்பு போதாத அவலங்களும் நிகழ்ந் திருக்காது.

இப்போதுகூட அவர், 5 கோடிமக்க ளுக்கு மேல் கொன்றொழித்த 1918  வைரஸ் பேரிடர் அளவுக்கு இன்னுமொரு வைரஸ் பேரிடர்வருமென்கிறார். இப்போது வந் திருக்கும் கோவிட் பேரிடரை விட பல மடங்கு ஆபத்து விளைக்க வல்லது என் கிறார். இப்போதாவது அவரது அறிவுரை செவிமடுக்கப்பட்டு தக்க காப்பு நடவடிக் கைகள் உலகளாவிய அளவில் எடுக்கப்பட வேண்டும்.

2) James Hansen, Climatologist

ஜேம்ஸ்ஹேன் சன் என்னும் சூழியல் அறிவியலாளர் 30 ஆண்டுகளாக வரப் போகும் சூழியல் பேரிடரைப் பற்றி உலகை எச்சரித்து வருகிறார். அமெரிக்க அரசு கூட்டங்களில் முறைப்படி தன் மனதில் படுவதை வெளிப்படையாக எடுத்துரைத் திருக்கிறார். அவருக்கு அதனால் அரசாங் கத்திடம் கெட்ட பெயர் கிடைத்ததும் உண்டு. அவர் சொல்லியதில் மிகவும் பர பரப்பாக அறியப்பட்டது: “நான் வெளிப் படையாக சூழியல் பேரிடர் பற்றித் தெளிவு படுத்தாவிட்டால், எனது பேரப் பிள்ளை களுக்கு நான் பதில் சொல்ல வேண்டும் என்பது. மேலும்  சூழியல் பேரிடரை தடுக்க நமக்கிருப்பது கடைசி வாய்ப்பு என்று அவர் சொல்லி பல ஆண்டுகளாகி விட்டன. 2009ஆம் ஆண்டு வெளிவந்த அவரது புத்தகத்திலும்  (Storms of my grand children – The truth about the coming climate catastrophe and our last chance to save humanity)   இதனைத் தெரிவிக்கிறார். சூழியல் பேரிடரால் உலக மக்களின் இடப்பெயர்வு, உயிரிழப்பு, பொருளாதாரச் சீரழிவு என எண்ணிப் பார்க்கவே முடியாத பேரழிவுகள் ஏற்படும். அவற்றிலிருந்து தப்ப வேண்டுமென்றால், இவரது ஆலோச னைகளை அரசாங்கங் கள் உடனே செயல்படுத்த வேண்டும்.

3) Noam Chomsky – Linguist, Philosopher, Political activist:

நவீன மொழியியல் துறையின் தந்தை என அழைக்கப்படும் நோம் சோம்ஸ்கி ஒரு பல்துறை ஆற்றலாளர். அரசியல், பொருளா தாரம், சமுதாயம் என பல தளங்களில் சிந்திப்பவர். வெளிப் படையாக துணிந்துத் தன் கருத்தை முன் வைப்பவர். தமிழ்மொழி யின் சிறப்பையும் தொன்மையையும் நன்க றிந்தவர். ஈழத் தமிழ்மக்கள் உரிமைக்குக் குரல் கொடுத் தவர். 2020ஆம் ஆண்டு வெளிவந்த அவரது புத்தகத்தில் (The climate crisis and the global green new deal – The political economy of saving the planet)  உடனடி செயல்பாடுகளை வலியுறுத்துகி றார்.  உலகில் கூடிவரும் வெப் பத்தை இன் னும் 10-20 ஆண்டுகளுக்குள் பெருமளவு குறைக்காவிடில், மீளமுடியாத பேராபத்து கள் நிகழும். மனித வாழ்வு பெரும் சிதை வுக்கும் பேரவலத்துக்கும் ஆட்பட நேரிடும்  என்றெல்லாம் எச்சரிக் கிறார்.

படிப்போம், பரப்புவோம், செயல்களில் இறங்குவோம்:

தன் வாழ்நாள் முழுதும் அறிவியல் ஆய்விலும், மக்கள் நலனுக்கான சிந்தனை யிலும், இந்த மூன்று அறிஞர்களும் முன்ன ணியில் இருக்கிறார்கள். உலகம் முழுதும், இவர்களைப் போல் பலப் பல அறிவியலா ளர்கள், சூழியல் ஆர்வலர்கள்,  சூழியல் செயல்பாட்டாளர்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். சூழியல் பேரிடரின் கோரத் தாண்டவம் உலகின் பல பகுதிகளில், பல் வேறு வகைகளில் தெரிய ஆரம்பித்து விட்டது. இது போன்று ஆவதறிந்த அறிவு டையோரின் கருத்துகளை ஊன்றிப்படித்து உண்மையை உணருவோம். இவற்றை மக்களிடையே பரப்புவோம், தெளிவு படுத்துவோம். சரியான முடிவுகளை எடுக்க அரசாங்கங்களையும் நிறுவனங்களையும் தூண்டுவோம். நம் பேரப்பிள்ளைகளுக்காக என்பதெல்லாம் தாண்டி, நமக்காகவும், நம்பிள்ளைகளுக்காகவுமே நாம் செயல்பட வேண்டிய அவசரம் வந்திருக்கிறது. சூழியல் பேரிடர்கள் முழு வீச்சில் தாக்கத் துவங்குமுன், உலகளாவிய பகுத்தறிவா ளர்களும், மனிதநேயர்களும் முழுமூச்சா கச் செயல்பட்டாக வேண்டும்.

No comments:

Post a Comment