புதுடில்லி,ஜூலை 17 இந்தியா வில் உரிய கொள்கைகளை வகுப் பதன் மூலம் மாற்றுத்திறனாளி களில் 50விழுக்காட்டினருக்கு வேலை வழங்க முடியும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
`அன்எர்த்இன்சைட்' என்ற அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியது. இதில், "இந்தியாவில் 3 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்.இவர்களில் சுமார் 50 விழுக்காட் டினர் (1.3 கோடி பேர்) வேலை செய்வதற்கான திறன் பெற்றுள் ளனர். ஆனால், தற்போது அரசு, தனியார் துறை மற்றும் முறை சாரா தொழில் துறை மற்றும் சுயதொழில்களில் 34 லட்சம் பேர் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். தொழில்முறை படிப்பு அல்லாத பட்டதாரிகள், பாலிடெக்னிக் மற்றும் டிப்ளமோ பட்டம் பெற்றவர்கள் என்ற வகையில் 3.4 லட்சம் பேர் உள்ளனர். இவர் களை சேவைத் துறை உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுத்துவ தற்கான வாய்ப்புகள் உள்ளன.இதன் மூலம் தனிநபர் வருமான மும் அதிகரிக்கும். எனவே, உரிய கொள்கை வகுப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும்" என்று கூறப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளில் பொறியியல், கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் அது சார்ந்த படிப் புகளில் பட்டம் வென்றவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாகும். ஆனால்தகவல் தொழில்நுட்பத் துறையில் 8 ஆயிரம் பேர்தான் பணிபுரிகின்றனர். முறைசாரா சில்லறை வர்த்தகத் துறையில் 13ஆயிரம் பேர் பணி புரிகின்றனர்.
வங்கி மற்றும் நிதித் துறை களில் அதிகஅளவில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment