கரோனா 4ஆம் அலை ஏற்பட வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

கரோனா 4ஆம் அலை ஏற்பட வாய்ப்பு

அறிவியல் ஆலோசகர் தகவல்

பாரீஸ், ஜூலை 1- உலகையே ஆட்டிப்படைத்து வரும் கரோனா புதுப்புது உருவெடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. பிரான்சில் ஏற்கனவே 3 அலைகளாக உருமாறி காவு வாங்கிய கரோனா, வரும் செப்டம்பர் மாதத்தில் 4ஆம் அலையாக உருவெடுக்கும் என்று அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் கடந்த சில நாட்களாக டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது 4ஆவது அலைக்கு வித்திடும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 4ஆவது அலையின் வீரியம் அதிகமாக இருக் கும் என அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியரு மான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபருக்கு சிறை

ஜோகன்னஸ்பர்க், ஜூலை 1- தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜேக் கப் ஜூமா. இவர் தனது 9 ஆண்டு கால பதவி காலத் தில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜேக்கப் ஜூமா தன் மீதான ஊழல் குற்றச் சாட்டுக்களை மறுத்த போதும் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அவரை பதவி விலக வலியுறுத்தியது‌.

இதையடுத்து 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜேக்கப் ஜூமா பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல் வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தென் ஆப்பிரிக் காவின் உச்சநீதிமன்றம் ஜேக்கப் ஜூமா மீதான ஊழல் வழக்குகளை பல மாதங்களாக விசாரித்து வருகிறது.

இந்த சூழலில் ஊழல் வழக்கு விசாரணைக்காக நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகும்படி ஜேக்கப் ஜூமாவுக்கு உச்சநீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து ஜேக்கப் ஜூமா நீதி மன்றத்தை அவமதித்ததாக அவர் மீது வழக்கு தொடரப் பட்டது. இந்த நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் மீதான இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்தது‌. அப்போது ஜேக்கப் ஜூமாவுக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.

No comments:

Post a Comment