சென்னை, ஜூலை 1- தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுப வர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் நாடு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட் டில் நேற்று (30.6.2021) புதிதாக 4,506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனா வால் பாதிக்கப்பட்டவர் களின் மொத்த எண் ணிக்கை 24,79,696 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கரோனாவால் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் 5,537 பேர் கரோனா குணம டைந்துள்ளனர். குணம டைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,08,886 ஆக உயர்ந்துள்ளது. தமி ழகத்தில் தற்போது 38,191 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment