ஏட்டுத் திக்குகளிலிருந்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·  ஆகஸ்ட் இறுதியில் 3ஆவது அலை தாக்கும். அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியம் என நிட்டி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

· நீட் தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முதல்வர் மு..ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தல்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·   மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைவழிகாட்டும் தத்துவம்என்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் குறிப்பிடுகிறார்,

 தி இந்து:

· கோவிட் -19 தொற்றுநோய்களின் போது முடிவுகளை மோடி அரசு, மாநிலங்களை கலந்து ஆலோசிக்காமல்   முடிவெடுத்ததால், அரசியல் அமைப்பில்இடை வெளிகளைஅம்பலப்படுத்தியதாக மூத்த காங்கிரஸ் தலைவர் . சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

· எய்ம்ஸ் நிறுவனத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதைத் தவிர, அரசு நடத்தும் நிறுவனங்களில் யுஜி, பிஜி மற்றும் சூப்பர்-ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்குவதில் இருந்து விடுபட தமிழ்நாடு ஒன்றிய அரசின் அனுமதியைக் கோரியுள்ளது என்று தமிழ் நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

· நாட்டின் மிகப் பெரிய வரலாற்று தொகுப்பு அமைப்பான இந்திய வரலாற்று காங்கிரஸ் (அய்.எச்.சி) பள்ளி பாடப்புத்தகங்களில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளது, கல்விக் காரணங்களுக்காக அல்லாமல், அரசியல் காரணங்களுக்காக  செய்யப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment