தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 3,592 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 2, 2021

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 3,592 குழந்தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர்

அமைச்சர் கீதாஜீவன் தகவல்

தூத்துக்குடி, ஜூலை 2. - “தமிழ் நாட்டில் கரோனா தொற் றால் பெற்றோரை இழந்த

3 ஆயிரத்து 592 குழந்தைகள் கண்டறியப் பட்டு உள்ளனர்" என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:

கரோனா தொற்று கார ணமாக தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளை கணக் கெடுக்கும் பணி நடந்து வரு கிறது. மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தை பாதுகாப்பு அலுவல கத்தின் மூலம் இவர்கள் கண் டறியப்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கரோனா காரணமாகதாய், தந்தை இரு வரையும் இழந்த 93 குழந் தைகள் கண்டறியப்பட்டு உள் ளனர். அவர்களுக்கு தேவை யான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்த 3 ஆயிரத்து 499 குழந் தைகள் கண்டறியப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அந்த குழந்தைகளுக்கு உதவு வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முறைப்படி வேகமாக நடைபெற முதல் அமைச்சர் அறிவுரை வழங்கி உள்ளார். இந்த திட்டத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்லூரி வரையிலான கல்விச் செலவை அரசே ஏற்கும், இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment