கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை, ஜூலை 1- கரோனா ஊரடங்கில் கடந்த 52 நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேருக்கு 2 வேளை உணவு வழங்கியது மனநிறைவு தருவதாக கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் உருக் கமுடன் தெரிவித்துள்ளார்.
சிறப்பான பணி மற் றும் மனித நேயம் கொண்ட காவல் அதிகாரி என பெயர் பெற்றவர் தமிழக காவல்துறையின் கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் 2017ஆம் ஆண்டு சென்னை காவல்துறை ஆணையராக பொறுப் பேற்று 3 ஆண்டுகள் பணி நிறைவு செய் தவர்.
அவர் ஆணையர் பொறுப்பில் இருக்கும் போதுதான் ‘மூன்றாம் கண்’ என்ற திட்டம் மூலம் சென்னை முழு வதும் 10 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா என்ற வகையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை நிறுவினார்.
தற்போது, இவர் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக கூடுதல் காவல்துறை இயக்குநராக உள்ளார். தற்போதைய கரோனா சூழலில் நாம் ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச உணவு வழங்கும் முயற் சியை மேற்கொண்டார். அதன்படி, நண்பர்களி டம் பெற்ற பணம் மற்றும் பொருட்களைக் கொண்டு, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத் துவமனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை உள்ளிட்ட 6 அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத் துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கடைநிலை ஊழியர்க ளுக்கு மதியம் மற்றும் இரவு வேளைகளில் தர மான உணவளிக்க முடிவு செய்தார். அதன்படி, வேளச்சேரி குருநானக் கல்லூரி செயலாளர் மற்றும் ஊர்காவல்படை சரக உதவி தளபதி மன் ஜித் சிங், சஞ்சய் பன்சாலி, வட்டார தளபதி ஆகி யோரின் உதவியுடன் தின மும் 3 ஆயிரம் பேருக்கு குருநானக் கல்லூரியில் தரமானஉணவு தயாரிக் கப்பட்டது.
கடந்த மே 10 முதல் ஜுன் 30ஆ-ம் தேதி வரை அனைத்து அரசு மருத் துவமனைகளுக்கும் காவல்துறையினரா லேயே கொண்டு செல் லப்பட்டு வழங்கப்பட் டது. இந்த பணியை திறம்பட செயல்படுத்திய காவலர்கள் மற்றும் பணி யாளர்களை நேற்று (30.6.2021) நேரில் அழைத்து, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கூடுதல் டிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் வழங்கினார்.
இதுகுறித்து ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, ‘ஊரடங்கு காலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உணவளிக் கும் திட்டத்தை தொடங் கினோம். 2015ஆம் ஆண்டு சென்னை வெள் ளத்தின்போது 4 நாளில் 2 லட்சம் பேருக்குஉணவு தயாரித்து வழங்கினோம். அப்போது, நான் ஊர் காவல் படையில் இருந் தேன். குருநானக் கல்லூரி யில் வைத்து உணவு தயா ரிக்கப்பட்டது. அதேபோல் தற்போது 52 நாட்கள் தொடர்ந்து உணவு தயாரித்து வழங் கியுள்ளோம்.
கரோனா காலத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் களின் பணி மகத்தானது. எனவே,அவர்களை நாம் கவனிக்கும்போது அவர் கள், தங்களது பணியை மேலும் வலுப்படுத்த முடியும். இதனால் பொது மக்களும் பயன்பெறுவர். இந்தப் பணி மனநிறை வைத் தருகிறது’’ என்றார்.
No comments:
Post a Comment