3 மாவட்டங்களில் 10 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகள் சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

3 மாவட்டங்களில் 10 ஆயிரம் கி.மீ. கிராம சாலைகள் சீரமைப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை,ஜூலை16- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறைப் பணிகள் தொடர்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர் களுடனான ஆய்வுக் கூட்டம்   14.7.2021 அன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத் துக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் ..வேலு தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் முன் னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் ..வேலு பேசியதாவது:

தமிழ்நாடு முழுவதும் கூட்டநெரிசல் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சிறப்பு விருந்தினர்கள், மாநிலத்தில் இருக்கும் அதிகாரிகள் பயணிக்கின்றனர்.

அவ்வாறு பயணிக்கக் கூடிய இடத்தில் சுற்றுலா மாளிகை தேவை என்ற கருத்து உள்ளது. அந்தப் பகுதியில் சுற்றுலா மாளிகைஅமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊராட்சி ஒன்றிய சாலைகள், ஊராட்சி சாலை என இரண்டு வகை இருக்கிறது. இந்த இரண்டு வகையும் மாநில நெடுஞ்சாலைத் துறையை சாராதவை. முதல்வரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் ஒன்றியத்துக்கு சம்பந்தப்பட்ட சாலைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் கணக்கு எடுத்து சுமார் 10 ஆயிரம் கி.மீ. தூரம், சாலைகளை அய்ந்தாண்டுகளுக்குள்பகுதி, பகுதியாக நபார்டு திட்டத்தின் மூலம் சீரமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப் படும்.

மாநில தலைநகரை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சாலைகள்தான் தலைநகர் சென்னை செல்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

ஆகையால் 3 மாவட்டங்களுக்கு முக்கி யத்துவம் கொடுத்து பணிகள் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தி உள்ளோம்.

எனவே இந்தக் குறைகள் எல்லாம் கட்டாயம் கூடிய விரைவில் விரைந்து செயல் பட்டு நிறைவேற்றுவோம் என்றார்.

No comments:

Post a Comment