சென்னை, ஜூலை 31 துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கான (ஹால் டிக்கெட்) நுழைவுச்சீட்டு தொடர்பான அறிவிப்பு நேற்று (30.7.2021) வெளியானது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அரசு வழங்கிய மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்கள், தனித்தேர்வர்களாக விண்ணப்பித்து தேர்வு எழுத முடியாதவர்களுக்கு துணைத்தேர்வு வருகிற 6ஆம்தேதி முதல் 19ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால்டிக்கெட் (நுழைவுச்சீட்டு) 31ஆம்தேதி காலை 11 மணி முதல் இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப எண் இல்லாத காரணத்தினால் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை தொடர்பு கொண்டு தங்களுடைய நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள் ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment