தமிழ்நாட்டில் 2,312 பேருக்கு கரோனா பாதிப்பு: 46 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

தமிழ்நாட்டில் 2,312 பேருக்கு கரோனா பாதிப்பு: 46 பேர் உயிரிழப்பு

சென்னை, ஜூலை 17 தமிழ்நாட்டில் நேற்று (16.7.2021) 952 பெண்கள் உள்பட 2,312 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப் பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (16.7.2021) புதிதாக 1 லட்சத்து 47 ஆயிரத்து 783 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 1,360 ஆண்கள், 952 பெண்கள் என மொத்தம் 2 ஆயி ரத்து 312 பேருக்கு புதி தாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 252 பேரும், தஞ்சாவூரில் 158 பேரும், ஈரோட்டில் 152 பேரும், சேலத்தில் 168 பேரும், சென்னையில் 144 பேரும், திருப்பூரில் 138 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்ச மாக தென்காசியில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 12 வயதுக்குட் பட்ட 124 குழந்தைகளுக் கும், 60 வயதுக்கு மேற் பட்ட முதியவர்கள் 300 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 44 லட்சத்து 7 ஆயிரத்து 643 பேருக்கு கரோனா பரி சோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 14 லட் சத்து 79 ஆயிரத்து 4 ஆண்களும், 10 லட்சத்து 52 ஆயிரத்து 76 பெண் களும், 3ஆம் பாலினத் தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 31 ஆயிரத்து 118 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 92 ஆயிரத்து 148 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 771 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 28 பேரும், தனியார் மருத் துவமனையில் 18 பேரும் என 46 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரி ழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சென் னையில் 7 பேரும், கோவை, கடலூர், திருவள்ளூரில் தலா 4 பேரும் உள்பட நேற்று மட்டும் 21 மாவட் டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 6 பேர் இணை நோய் அல் லாதவர்கள் ஆவர். அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 33 ஆயிரத்து 652 பேர் கரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 39 ஆயிரத்து 546 ஆக்சி ஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 16 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 271 அய்.சி.யு படுக்கைகள் என மொத்தம் 72 ஆயி ரத்து 833 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

கரோனா பாதிப்பில் இருந்து 2,986 பேர் நேற்று குணமடைந்தனர். இதில் அதிகபட்சமாக கோவை யில் 418 பேரும், சென்னை யில் 142 பேரும், செங்கல் பட்டில் 187 பேரும், ஈரோட்டில் 231 பேரும், திருப்பூரில் 126 பேரும், சேலத்தில் 208 பேரும் அடங்குவர். இதுவரை யில் 24 லட்சத்து 68 ஆயி ரத்து 236 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 29 ஆயிரத்து 230 பேர் உள்ளனர். இவ் வாறு அதில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment