மாஸ்கோ, ஜூலை 17- சீனா வின் உகானில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதி யில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவ தும் பரவியதால் அனைத்து நாடுகளும் மிகுந்த நெருக் கடியை சந்தித்து வருகின்றன.
கொடூர கரோனா வால் அனைத்து துறை களும் கடுமையாக பாதிக் கப்பட்ட நிலையில், சுகா தாரத்துறை மேலும் அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது. கரோனாவுக் கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறையிலேயே கவனம் செலுத்தியதால் வழக்கமான பிற சேவை கள் உலக அளவில் முடங்கி விட்டன.
இதில் முக்கியமாக, குழந்தைகளுக்கு வழக்க மான தடுப்பூசி பணிகள் மிகுந்த பாதிப்பை சந் தித்து இருக்கின்றன. இதன் காரணமாக கடந்த ஆண் டில் (2020) மட்டுமே உலக அளவில் 2.30 கோடி குழந்தைகள் வழக்கமான தடுப்பூசிகளை போட வில்லை. இது முந்தைய 2019ஆம் ஆண்டை விட 37 லட்சம் அதிகமாகும்.
அதாவது இந்த குழந் தைகள் தட்டம்மை, டிப் தீரியா மற்றும் டெட்ட னஸ் போன்ற தடுப்பூசி கள் போடவில்லை என உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெப் அமைப்பு நடத்திய கூட்டு ஆய்வில் தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் 30 லட்சத்துக் கும் அதிகமான குழந்தை கள் தங்கள் முதல் தட் டம்மை தடுப்பூசியை தவறவிட்டிருக்கின்றனர். 35 லட்சத்துக்கு மேற் பட்ட குழந்தைகள் முதல் டோஸ் டிப்தீரியா தடுப் பூசியை பெறவில்லை.
இதில் குறிப்பாக 1.7 கோடி குழந்தைகள் எந்த வொரு தடுப்பூசியையும் கடந்த ஆண்டு போட வில்லை. இது சுகாதார சமநிலையை மிகவும் மோசமாக பாதிக்கும் என உலக சுகாதார நிறு வனமும், யுனிசெப் அமைப் பும் கவலை தெரிவித்தி ருக்கின்றன.
தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் தான் குழந்தைகளுக்கான இந்த வழக்கமான தடுப் பூசி பணிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தாகவும் கண்டறியப் பட்டு உள்ளது.
ஏற்கெனவே கரோனா வுடன் போராடும் சமூகம் மற்றும் சுகாதார அமைப் புகளுக்கு, இந்த தடுப்பூசி போடாததால் ஏற்படும் நோய் தாக்குதல் மேலும் பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத் துள்ள உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட் ரோஸ் கேப்ரியேசஸ், எனவே குழந்தைகளுக் கான தடுப்பூசிக்கு முத லீடு செய்வதும், ஒவ் வொரு குழந்தையையும் தடுப்பூசி அடைவதை உறுதி செய்வதும் முன் னெப்போதையும் விட அவசரமானது என்றும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment