முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.20 கோடியில் 1,000 குடியிருப்புகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.20 கோடியில் 1,000 குடியிருப்புகள்

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

திண்டுக்கல், ஜூலை 1 தமிழகத் திலேயே முதல் முறையாக திண்டுக்கல் மாவட்டத் தில் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமி ழர்களுக்கு முதல் கட்ட மாக ரூ.20 கோடி மதிப் பீட்டில் 1,000 குடியிருப் புகள் கட்டுவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டுள் ளது என, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட் டத்தில் உள்ள இலங்கை அதிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தோட் டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி ஆகிய ஊர்களில்உள்ள இலங்கை அகதிகள் முகாம் களில் ஜூன் 30 அன்று நடைபெற்றது. திண்டுக் கல் மாவட்ட ஆட்சியர் .விசாகன் தலைமை வகித்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை இயக்குநர் ஜெசிந் தாலா சரத் வரவேற்றார். திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி, சட்டமன்ற உறுப்பினர் .பெ.செந் தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவுத்துறை அமைச் சர் அய்.பெரியசாமி, சிறு பான்மையினர் நலன் மற் றும் வெளிநாடு வாழ் தமி ழர்கள் நலத்துறை அமைச் சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர், இலங்கை அகதிகள் முகாம்களில் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

முகாமில் தங்கியுள்ள வர்களின் தேவைகளைக் கேட்டறிந்தனர். தொடர்ந்து, முகாமில் வசிப்பவர்களுக்கு கரோனா நிவாரண உத விகளாக அரிசி, மளிகைப் பொருட்களை அமைச் சர்கள் வழங்கினர்.

அமைச்சர் அய். பெரியசாமி பேசுகையில், “இலங்கை அகதிகள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமையைப் பெற் றுத் தருவதற்கான முயற்சி யைத் தமிழக முதல்வர் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து, பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளார்என்றார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள இலங்கை வாழ் தமிழகத் தில் உள்ள 108 இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம் களுக்கு நேரடியாகச் சென்று அவர்களின் தேவை களைக் கேட்டறிந்து வரு கிறோம். தமிழகத்திலேயே திண்டுக்கல் மாவட்டத் தில்தான் முகாமில் வசிக் கும் இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு முதல் கட்டமாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 1,000 குடி யிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் இது வரை வக்பு வாரியத்திற்குச் சொந்தமான 7,000 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் கண்டறியப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக் கிரமிப்பு நிலங்கள் விரை வில் கையகப்படுத்தி வக்பு வாரியத்தில் ஒப்படைக் கப்படும்.

வக்பு வாரியத்தின் சொத்துகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு உடனுக்குடன் பட்டியல் வெளியிடப்பட்டு வருகி றது. சுமார் 7,000 சொத் துகள் வக்பு வாரியத்திற்குச் சொந்தமானவை எனப் பட்டிய லிடப்பட்டுள் ளது. சொத்துகள் விவரம் குறித்து ஆன்லைனில் தெரிந்துகொள்ளலாம். முழுமையாக வக்பு வாரிய இடங்கள் கைப்பற்றப் பட்டு முழுப் பட்டியல் விரைவில் வெளியிடப் படும்என்றார்.

No comments:

Post a Comment