2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான கூடங்குளம் 5, 6 அணு உலை கட்டுமானப் பணிகள் தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்திக்கான கூடங்குளம் 5, 6 அணு உலை கட்டுமானப் பணிகள் தொடக்கம்

நெல்லை, ஜூலை 1- நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இந் தியா - ரஷ்யா கூட்டு முயற்சியுடன் தலா 1000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள் ளன. இதே வளாகத்தில் 3, 4 அணு உலைகளுக்கான கட்டு மானப் பணிகளும் நடந்து வருகின்றன.

கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் 6 ஆயிரம் மெகாவாட், அதாவது 1000 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 6 அணு உலைகள் அமைப்பது இந்திய அணுசக்தி துறையின் திட்டமாகும்.

அதன்படி 5, 6 ஆவது அணு உலைகள் அமைப்பது தொடர் பாக இந்தியா -_ ரஷ்யா இடையே பேச்சு வார்த்தை, ஒப்பந்தங்கள் கையெழுத்து போன்ற பணிகள் நடந்து வந்தன.

அனைத்துப் பணிகளும் முடி வடைந்ததை தொடர்ந்து 5, 6 ஆவது அணு உலைகள் அமைப் பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப் படுகிறது.

இதற்கான கட்டு மானப் பணிகளை 29.6.2021 அன்று இந்திய அணுசக்தி துறையின் செயலாளர் மற்றும் அணுசக்தி வாரியத்தின் தலைவர் கே.என்.வியாஸ் மும்பையில் இருந்தவாறு காணொலிமூலம் துவக்கி வைத் தார். கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின் பற்றி இந்த நிகழ்ச்சியில் கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் காட் போலே, 5, 6 அணு உலை களுக்கான திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலைய மூத்த விஞ்ஞானிகள், ரஷ்ய விஞ்ஞானிகள் என முக்கிய அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

கூடங்குளத்தில் தற்போது முதல் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டு வருகிறது. 3, 4 அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2016ஆம் ஆண்டு துவங்கியது.

இந்தப் பணிகளை 69 மாதங்களில், அதாவது 2022 - _ 23ஆம் ஆண்டில் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment