வாசிங்டன், ஜூலை 17- தவறான விசா கொள்கை களின் காரணமாக, திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவிற்கு பதி லாக கனடாவிற்கு பெரிய அளவில் செல்லத் தொடங் கியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விசாரணை குழுவினரி டம், அமெரிக்க கொள் கைக்கான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது
மார்ச் 2021இல் அமெ ரிக்காவில் பணி புரிய அளிக்கப்படும் 85,000 எச்.1பி விசாக்களுக்கு, 3.08 லட்சம் விண்ணப் பங்கள் பெறப்பட்டுள் ளதை சுட்டிக் காட்டிய இந்த ஆய்வு நிறுவனம், இவற்றில் 72 சதவீத விண்ணப்பங்கள் பரிசீ லனை செய்யப்படுவதற்கு முன்பே நிராகரிக்கப்படுவ தாக கூறியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது மூன்று வகை யான விசாக்களின் அடிப் படையில் 9.15 லட்சம் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 2030இல் இவர்களின் எண்ணிக்கை 21.95 லட்சமாக அதிகரிக் கும் என்று கணிக்கப்பட் டுள்ளது.
2016ஆம் ஆண்டை விட 2018இல் அமெரிக்க பல்கலைக் கழகங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக அமெ ரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பல்கலைக் கழங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் மாணவர்களில் 75 சதவீதத்தினர் வெளி நாட்டு மாணவர்கள் ஆவர். இந்த வெளிநாட்டு மாணவர்களில் முன்றில் இரண்டு பங்கினர் இந் தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக் கது.
2016ஆம் ஆண்டை விட 2018இல் கனடா பல் கலைக்கழகங்களில் பயி லும் இந்திய மாணவர் களின் எண்ணிக்கை 127 சதவீதம் அதிகரித்து 1.72 லட்சமாக அதிகரித்துள் ளது அமெரிக்காவின் குடி யேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அமெ ரிக்க கொள்கைக்கான தேசிய ஆய்வு நிறுவனம் அரசை கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment