புதுடில்லி, ஜூலை 16 நாடா ளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க 18ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக, கடந்த ஆண்டு 3 நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் முன்கூட் டியே முடித்துக்கொள்ளப்பட் டன. கடந்த ஆண்டு நடக்க வேண்டிய குளிர்கால கூட்டத் தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடர், 5 மாநில சட்டசபை தேர்தல்கள் காரணமாக, முன்கூட்டியே முடிவடைந்தது.
இதையடுத்து, நடப்பு ஆண்டுக் கான மழைக்கால கூட்டத் தொடர், வருகிற 19ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஆகஸ்டு 13ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.
முந்தைய ஓரிரு கூட்டத் தொடர்களில் மாநிலங்களவை காலையிலும், மக்களவை மாலை யிலும் என தனித்தனி நேரங்களில் நடத்தப்பட்டன. ஆனால், இந்த தொடரில் இரு அவைகளும் ஒரே நேரத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனை வருக்கும் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு நடக் கும் முதலாவது கூட்டத்தொடர் இதுவே ஆகும். 323 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருப்பதாகவும், 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு டோஸ் கூட போடவில்லை என்றும் நாடாளுமன்ற அவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
தடுப்பூசி போடாதவர்கள் நாடாளுமன்றத்துக்குள் நுழைய ஆர்.டி.-பி.சி.ஆர். கரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.
இந்த நிலையில் மழைக்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி விவாதிக்க ஒன்றிய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள் ளது. இந்த கூட்டம் வருகிற 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் பங்கேற்குமாறு நாடா ளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர் களுக்கு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்து இருப் பதாக ஒன்றிய அரசு வட்டா ரங்கள் தெரிவித்தன.
கூட்டத்தில், பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று தெரிகிறது. கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை ஒன்றிய அரசு கோரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment