தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் - ஜூலை 17 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 17, 2021

தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் - ஜூலை 17

டிமைப்பட்டு கிடந்த தமிழ் சமூகத்தை தட்டி எழுப்பி இனஉணர்வை மொழி உணர்வை ஊட்டி சுயமரியாதை யோடு தமிழர்கள் வாழ தன் வாழ்நாள் எல்லாம் போராடி பாடுபட்டு உரிமைகளை பெற்று தந்தவர் தந்தை பெரியார்.

அய்யாவின் கொள்கைகளை சட்டப் பூர்வமானக நிறைவேற்றிய அரசு திரா விட முன்னேற்ற கழக அரசான மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்னும் சென்னை  ராஜாதானி என்று இருந்த பெயரைதமிழ்நாடுஎன்று பெயர்சூட்ய நாள் இன்று, ஜூலை 17 (1967).

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது தான் தந்தை பெரியார்தமிழ்நாடு தமிழ ருக்கே’’ என்று அறிவித்தார் பல லட்சக் கணக்கான தமிழ் மக்கள் கைத்தட்டி மகிழ்வோடு வரவேற்றனர்.

1955 இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாட்டோடு கேரளா, ஆந்திர, கர்நாடக போன்ற பகுதிகளை  இணைத்து தட்சண பிரதேசம் என்பதை கொண்டு வர முயற்சித்தது அன்றைய ஒன்றிய அரசு.

தமிழர்களை சிறுபான்மையினராக் கும் இதை கடுமையாக எதிர்த்து ஒழித்த வர் தந்தை பெரியார்.

1956 இல் நடைப்பெற்ற கோவை மாவட்ட திராவிடர் கழக மாநாட்டில் தந்தை பெரியார் சென்னை ராஜ்யம்   என்ற பெயரை மாற்றிதமிழ்நாடுஎன்று பெயர் சூட்ட தீர்மானம் போட்டார்.

இதே கோரிக்கைக்காக விருதுநகர் சூலக்கரையில் 75 நாட்கள் உண்ணா விரதம் இருந்தார் தியாகி சங்கரலிங்கனார் 76 ஆம் நாள் உயிர்த்தார். எதிர்கட்சி தலைவராக இருந்த அண்ணா அவர்கள் அவரை சந்தித்து ஆறுதல் கூறி உறுதி மொழி கொடுத்தார்.

ஆட்சிக்கு வந்த பின்னர் சட்டப் பேரவையில் பெயர் மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார் பேரறிஞர் அண்ணா தந்தை பெரியாரின் தலைமாணாக்கன் அண்ணா.

நான் தமிழ்நாடு என்று சொல்லும் போது நீங்கள் வாழ்க என்று சொல்ல வேண்டும்என்றார்தமிழ்நாடுஎன்று பெயர் சொல்லிவிட்டு தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

அப்போது தமிழ்நாடு என்ற பெயரால் இனம் வாழும் மொழிவாழும் வளர்ச்சிய டையும் இதை சிதைக்க நினைப்பவர்கள் நாட்டின் அழிவு சக்திகள் என்று  அண்ணா சொன்னார். பெயர் மாற்ற விழாவில் பேசிய போது சுயமரியாதை திருமண சட்டம், இரு மொழிக் கொள்கை, தமிழ் நாடு பெயர் மாற்றம் ஆகியவற்றை தான் செய்த முப்பெரும் சாதனைகளை குறிப் பிட்டு, அவற்றை மாற்ற நினைப்பவர் களுக்கு ஒரு அச்சம் வரும். அந்த அச்சம் உள்ளவரை நானே முதலமைச்சர் என்றார்.

ஆம். இன்றும் ஆள்கிறார் அண்ணா.

- வழக்கறிஞர் பா.மணியம்மை

No comments:

Post a Comment