சென்னை, ஜூலை 31- 13 லட்சம் மாணவ-மாணவிகளின் சி.பி. எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நேற்று (30.7.2021) வெளியானது. இதில் 8 ஆயி ரத்து 243 பேர் தேர்ச்சி பெற வில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்ததால், நாடு முழுவதும் உள்ள கல்வி வாரி யங்கள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவி களுக்கு தேர்வு நடத்தாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தன.
இதில் உயர்கல்வியில் சேரு வதற்கு 12ஆம் வகுப்பு மாணவர் களுக்கு பொதுத்தேர்வு மதிப் பெண் அவசியம் என்பதால், அதை எவ்வாறு வழங்குவது? என்பது குறித்து கல்வி வாரி யங்கள் ஆலோசனை நடத்தி அதன் அடிப்படையில் முடிவு களை வெளியிட்டு வருகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், மாநில பாடத்திட் டத்தின் கீழ் படித்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 473 மாணவ-மாண விகளுக்கான மதிப்பெண்ணை கணக்கிட்டு தேர்வு முடிவு கடந்த 19ஆம் தேதி வெளியி டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சி.அய்.எஸ்.சி.இ. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவை அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக மத் திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவை நேற்று (30.7.2021) வெளியிட்டு இருக்கிறது. கரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாததால், மாணவ-மாணவிகளுக்கு அவர்களின் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மதிப் பெண்களில் இருந்து விகிதாச் சார அடிப்படையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக் கிடப்பட்டு வழங்கப்பட இருப் பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்தி ருந்தது.
தேர்வு முடிவு வெளியிடப் பட்டு இருக்கும் 13 லட்சத்து 4 ஆயிரத்து 561 மாணவ-மாணவி களில், 12 லட்சத்து 96 ஆயிரத்து 318 பேர் (99.92 சதவீதம்) தேர்ச்சி பெற்று இருப்பதாகவும், மீதமுள்ள 8 ஆயிரத்து 243 பேர் தேர்ச்சி பெறவில்லை என் றும் தகவல்கள் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களில் 99.67 சதவீதம் மாணவிகள் என்றும், 99.13 சதவீதம் மாண வர்கள் என்றும், 100 சதவீதம் திருநங்கைகள் என்றும் கூறப் பட்டு இருக்கிறது. மாணவர் களை விட மாணவிகள் 0.54 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு மதிப்பெண்ணை பொறுத்தவரையில் 95 சதவீதத் துக்கு மேலான மதிப்பெண்ணை 70 ஆயிரத்து 4 பேரும், 90 சத வீதம் முதல் 95 சதவீதம் வரையிலான மதிப்பெண்ணை 1 லட்சத்து 50 ஆயிரத்து 152 பேரும் பெற்று இருக்கின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 40 ஆயிரம் மாணவ-மாணவி கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் எவ் வளவு சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர் என்பது பற்றிய தக வல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment