10 புதிய மின் வாகனங்கள்: ‘டாடா மோட்டார்ஸ்’ அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

10 புதிய மின் வாகனங்கள்: ‘டாடா மோட்டார்ஸ்’ அறிவிப்பு

புதுடில்லி, ஜூலை 1- ‘டாடா மோட்டார்ஸ்நிறுவனம், 2025ஆம் ஆண்டுக்குள், 10 புதிய மின் வாகனங் களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக, ‘டாடா சன்ஸ்நிறுவனத் தின் தலைவர் சந்திரசேக ரன் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்ட அறிக்கையில், அவர் இவ் வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது: இந்தி யாவில் எங்களுடைய தயாரிப்பில், மின்சார வாகனத்தின் பங்கு, 2020-2021ஆம் நிதியாண்டில் இருமடங்கு அதிகரித்துள் ளது. வரும் ஆண்டுகளில் இந்த பங்களிப்பு மேலும் வேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம். இந்திய சந்தையில் இந்த மாற் றத்தை, ‘டாடா மோட் டார்ஸ்முன்னெடுத்து செல்லும். 2025ஆம் ஆண்டுக் குள் நிறுவனம், 10 புதிய மின் வாகனங் களை கொண்டிருக்கும்.

அது மட்டுமின்றி, நாடு முழுக்க சார்ஜிங் சேவை வசதிகளை ஏற் படுத்துவதிலும் அதிகம் முதலீடு செய்ய இருக்கி றோம். இவை மட்டு மின்றி, இந்தியா மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் இருக்கும் பேட்டரி தயா ரிப்பு நிறுவனங்களுட னும், ‘டாடா குழுமம்கூட்டு வைத்து, தடையற்ற பேட்டரி விநியோகத்தை யும் வழங்க இருக்கிறோம். ‘ஜாகுவார்தயாரிப்புகளும் 2025இல் முழுமையாக மின் வாகன மயமாக்கப் படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment