முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சென்னை, ஜூன் 19 மேகதாது அணையை கட்டும் முடிவை கருநாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஒன்றிய அரசு அனுமதி வழங்கியதும் மேகதாது அணை கட்டப்படும் என கருநாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா ஒருதலைப் பட்சமாக அறிவித்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட் டுள்ளார். மேலும், இத்திட்டம் விவசாயி களின் நலனுக்கு எதிரானது, தமிழ் நாடு சட்டமன்றத்தில் அணை கட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கடந்த 2015 இல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அத்தீர்மானத்தை பிரதமர் மோடியிடம் வழங்கினர்.
சமீபத்தில் பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போதும் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், எடியூரப்பா தன்னிச்சையாக இப்படியொரு அறிவிப்பை வெளியிட் டிருப்பது இரு மாநில நல்லுறவிற்கு எவ்விதத்திலும் உகந்த ஒரு நிலைப்பாடு அல்ல என்பதோடு, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு விவசாயிகளையும் வஞ் சிக்க முயற்சிக்கும் செயலாகும்,
எனவே கருநாடக அரசு இம் முடிவை கைவிட வேண்டும், மத்திய அரசு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்றும் தமிழ்நாட்டின் சார்பில் எனது கடுமையான எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தனது அறிக்கையில் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment