திருச்சி,ஜூன்16- காவிரி டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று (16.6.2021) தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணை 12ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், கல்லணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு,
மா.சுப்ர மணியன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்
மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்ய நாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட ஆட்சியர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுபபினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப் பணித் துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கல்லணையிலிருந்து
தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் திறப்பையொட்டி கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்ல ணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆற்றின் பாலங்களில் புதிதாக வர்ணம் பூசப்பட்டது. மேட்டூர் அணை 12ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில் கல்ல ணையும் திறக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செய்தியாளரிடம்
அமைச்சர் கே.என்.நேரு
கூறுகையில்,
"கல்ல
ணைக்கு தண்ணீர் வருவதைப் பொருத்து, காவிரி, வெண்ணாறு, கல் லணை கால்வாயில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு அதிகப்படுத்தப்படும்.
கல்லணையிலிருந்து
தற்போது திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடை மடைப் பகுதிக்குச் செல்ல 10 நாட்கள் ஆகும். தூர்வாரும் பணி இதுவரை 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. தண் ணீர் சென்றடைவதற்குள் 100 சதவீத பணிகள் முடிவடைந்து விடும்.
இந்தப்
பாசனத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.04 லட்சம் ஏக்கரும், திருவாரூர் மாவட்டத்தில் 89 ஆயிரம் ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 5,000 ஏக்கரும், மயிலாடுதுறை மாவட் டத்தில் 96 ஆயிரம் ஏக்கரும், கடலூர் மாவட்டத்தில் 16,000 ஏக்கரும் என, மொத்தம் 3.10 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யத் திட்டமிடப்பட் டுள்ளது" என்றார்.
No comments:
Post a Comment