பெரியார் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

பெரியார் பிறந்த நாள் விழாவை மாவட்டம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுவோம்

கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, ஜூன் 2- கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்( 19-.5.2021) புதன்கிழமை அன்று மாலை ஆறு மணி அளவில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக் கூட்டம் மாவட்ட தலைவர் அறிவரசன் தலைமையில் நடை பெற்றது. மாணவர் கழக மா. கயல்விழி கடவுள் மறுப்பு கூறினார். இக்கூட் டத்திற்கு மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம் அவர்கள் அனை வரையும் வரவேற்று தொகுத்து வழங்கினர்.

இக்கூட்டம், மாநில பகுத்தறி வாளர் துணைத் தலைவர் அண்ணா சரவணன்,மண்டல தலைவர் . தமிழ்ச் செல்வன், செயலாளர் பழ. பிரபு, பொதுக்குழு உறுப்பினர் கோ. திராவிட மணி, .ஜான்சிராணி, மண் டல இளைஞரணி செயலாளர் . ஆறுமுகம் ,மாவட்ட அமைப்பாளர் தி. கதிரவன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில் மாநில அமைப் பாளர் ஒரத்தநாடு.இரா. குணசேகரன் தொடக்க உரையாற்றினார் .அதில் தமிழர் தலைவர் அவர்கள் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணியை ஒருங் கிணைத்து, "திராவிடம்

"என்ற முழக்கத்தை தேர்தலுக்கு முன்பே வலியுறுத்தி தமிழ்நாடெங்கும் சுற்றி சூறாவளியாக தேர்தல் பிரச் சாரம் செய்து தேசிய முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்த தமிழர் தலைவரின் உழைப்பை பற்றி யும் ஒவ்வொரு கழகத் தோழர்களின் செயல்பாடுகள் பற்றியும், கரோனா காலத்தில் தமிழர் தலைவர் அவர்கள் ஒவ்வொரு கழகத் தோழர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பாதுகாப்பை வலியுறுத்தியதையும் எடுத்துச் சொல்லி உரையாற்றினார்

மேலும் இக்கூட்டத்தில் மகளிர் அணி தலைவர் இந்திராகாந்தி, மக ளிர் பாசறை செயலாளர் வித்யா பிரபு, மாவட்ட  துணைத்தலைவர் அரங்க. ரவி, ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ் ,காவேரிப்பட்டி னம் ஒன்றிய செயலாளர் பெ.செல்வம் இளைஞரணி செயலாளர் வே. புக ழேந்தி, மாவட்ட மாணவர் கழக செய லாளர் சுபாஷ் ,மாநில மாணவர் கழக துணை அமைப் பாளர் நாத்திகன், மாவட்ட இளைஞ ரணி துணைச் செயலாளர் ராஜேசன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் நிலவன், மற்றும் கழகத் தோழர்கள் தங்களு டைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர் மொத்தம் இக்கூட்டத் தில் 45 தோழர்கள் கலந்து கொண் டனர்.

இறுதியாக மாநில அமைப்பு செய லாளர் ஊமை.ஜெயராமன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதில் விடுதலை நாளிதழை ஒவ்வொரு கழகத் தோழர் களும் எப்படி அனுப்புவது என்பது பற்றியும், ஒவ்வொரு தோழரும் தங்கள் குழுவில் உள்ள நண்பர்களை உறவினர் களை எப்படி தனித்தனியாக, பிரித்து விடுதலை அனுப்புவது பற்றியும் தாம் குழுவில் அனுப்பும் நண்பர்களுக்கு விடுதலையை அனுப்பி தங்களுடைய கருத்துகளை எப்படி கேட்டுப் பெறு வது என்பது பற்றியும் தெளி வாகவும், விளக்கமாகவும் எடுத்துக் கூறினார். இறுதியாக மாநில மாண வர் கழக அமைப்பாளர் செந்தூர் பாண்டியன் தன்னுடைய கருத்துக் களை எடுத்துக் கூறியும் அனைவருக் கும் நன்றி கூறியும் முடித்து வைத்தார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1. மதச்சார்பற்ற முற்போக்கு கூட் டணியை ஆதரித்து" திராவிடம் வெல் லும் "என்ற முழக்கத்தை முன்னிறுத்தி தமிழ்நாடு எங்கும் சுற்றி சூறாவளியாக சுழன்று தேர்தல் பிரச்சாரம் செய்து, வெற்றிவாகை சூடிய தமிழர் தலைவர் ,ஆசிரியர், அய்யா அவர்களுக்கு மாவட்ட கழகம் சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

2. உலகத்தின் முதல் பகுத்தறிவு ஏடு, புரட்சி ஏடாம் விடுதலையை பிடிஎஃப் வடிவில் வாட்ஸ்அ ப் மூலம் தொடர்ந்து ஒவ்வொரு கழகத் தோழரும் அதிகப் படியான நபர்களுக்கு அனுப்புவது எனவும். இப்போது அனுப்பி வருகிற 22,000 தோழர்களை அதிகப்படுத்தி வருங்காலங்களில் 25 ஆயிரமாக இலக்கை எட்டுவது எனவும் தீர் மானிக்கப்படுகிறது.

3. வருகின்ற செப்டம்பர் 17 அன்று தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை கிருட்டினகிரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது எனவும் , அதன் முதல் வேலையாக உடனடியாக மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் சுவரெழுத்து பிரச்சாரப் பணியை மேற் கொள்வது எனவும் தீர்மானிக்கப்படு கிறது

கரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றும் வகையில் கிருட்டி னகிரி மாவட்ட மாணவர் கழக சார்பில் தகவல் தொடர்பு சேவை மய்யம் அமைத்து செயல்பட்டு வரும் மாணவர் கழகத்திற்கு மாவட்ட கழகத்தின் சார் பில் வாழ்த்துகளையும் பாராட்டுக்க ளையும் தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment