பொது மக்களுக்கு தொலைக்காட்சியில் முதலமைச்சர் வேண்டுகோள்
சென்னை, ஜன்¨ 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (14.6.2021) அரசு அறிவித் துள்ள கரோனா கால ஊரடங்கு தளர்வு வழிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தொலைக்காட்சியில் ஆற்றிய உரை வருமாறு,
தமிழ்நாட்டு மக்கள் அனை வருக்கும் எனது அன்பான வணக்கம்.
உங்கள் நலன் காக்கும் இந்த அரசு தொடர்ச்சியாக மேற் கொண்ட நடவடிக்கைகளால் கரோனா என்ற பெருந்தொற்று ஒரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு தொற்றால் பாதிக் கப்படுபவர்கள் 36,000 ஆக இருந் தார்கள். இது 50,000 ஆகும் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அரசு எடுத்த பல்வேறு நட வடிக்கைகளால் பாதிப்பு எண் ணிக்கை 15,000-க்கும் கீழ் குறைந்து கொண்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் தொற்றால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை மிக விரை வாக குறைந்துகொண்டே வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக இல்லை என்பது மாதிரியான நிலைமை இப்போது இல்லை. கட்டளை மய்யம் என்ற வார் ரூமுக்கு உதவிகள் கேட்டு வருகின்ற தொலைபேசி அழைப்புகளும் குறைந்துவிட்டது. தேவைப்படுபவர்களுக்கு உடனடி யாக சிகிச்சை கிடைக்கக்கூடிய நிலைமையை உங்களுக்கான இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. தமிழ் நாடு அரசு பல்வேறு முனைகளில் எடுத்த முயற்சிகளின் காரண மாகத்தான் இரண்டு வாரக் காலத் தில் அனைத்தும் கட்டுக்குள் வந்தி ருக்கிறது.
ஒருவரிடம் இருந்து இன்னொரு வருக்குப் பரவுகிற சங்கிலியை முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகத்தான் மக்கள் நடமாட் டத்தைக் கட்டுப்படுத்த முழு ஊர டங்கை அறிவித்தோம். ஊரடங்குக் கட்டுப்பாட்டை மக்கள் முறைய £கவும், முழுமையாகவும் கடை பிடித்ததால்தான், இந்த அளவிற்குக் கரோனா பரவல் கட்டுக்குள் வந்திருக்கிறது. எனவே, விதி முறைகளைப் பின்பற்றி நடந்து கொண்ட நாட்டு மக்கள் அனை வருக்கும் எனது நெஞ்சார்ந்த நன் றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊரடங்கை இன்னும் ஒருவாரக் காலத்திற்கு நீட்டித்து அறிவியுங்கள் என்று பொதுமக்களிடமிருந்தே கோரிக்கை வந்தது. அரசும் மக்களும் ஒரே மாதிரியாக சிந்திப்பது மட்டு மல்ல, மக்களுடைய எண்ணங் களைத்தான் அரசு செயல்படுத்தி வருகிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை. என்னதான் அரசாங்கம் கட்டுப் பாடுகளை விதித்தாலும், அதை மக்கள் பின்பற்றினால்தான் முழு வெற்றி சாத்தியம் ஆகும். விதிகளை மக்கள் பின்பற்றுவதால்தான் தொற்று பரவல் குறைந்தது. அதே போன்ற எச்சரிக்கை உணர்வோடு மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன்.
கரோனா கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொன்னேனே தவிர, முழுமையாக அதற்கு முற் றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசாங்கம் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அரசும், மக்க ளுடைய நெருக்கடியை உணர்ந்திருக் கின்ற காரணத்தினால்தான் கரோனா தொற்று குறைந்து வரும் மாவட்டங்களில் சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம். சில கட் டுப்பாடுகளை விதித்திருக்கிறோம்.
கடை நடத்தும் பொதுமக்கள்: கரோனா காலத்தில் எங்கள் வாழ்வாதாரமே இல்லாமல் வீட் டில் இருந்தோம். அதனால் இப் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடை வைக்கலாம் என்று சொன்னதால் கரோனா விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு நாங்கள் நல்லபடியாக கடையை நடத் துகிறோம். மாண்புமிகு முதல மைச்சர் அவர்களுக்கு நன்றி.
தமிழக முதலமைச்சர் அவர் களுக்கு வணக்கம். கரோனா காலத் தில், இந்த லாக்டவுன் நேரத்தில், எங்கள் வாழ்வாதாரம் மிகவும் கடினமாக இருந்தது. முதல் அமைச்சர் அவர்கள் தளர்வுகள் அறிவித்தப்படி சமூக இடை வெளியைக் கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து, தொழில் புரிவதற்கு நன்மை ஏற்படுத்திக் கொடுத்த தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
முதலமைச்சர்: இவர்கள் சொன்னது போல, இவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதிலும் அரசு கண்ணும் கருத்துமாக இருக் கிறது. கரோனாவும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக் கூடாது என்ற இரண்டையும் கவனத்தில் கொண்டு அரசு கட்டுப்பாடுகளைச் செயல் படுத்தியாக வேண்டியிருக்கிறது. அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டிய கடமை மக்களாகிய உங்களுக்கு இருக்கிறது. இந்த தளர்வுகளுக்கான உண்மையான நோக்கத்தை உணர்ந்து, மக்கள் செயல்பட வேண்டும். தளர்வுகள் கொடுத்துவிட்டார்கள் என்று அவசியம் இல்லாமல் வெளியில் நடமாடக் கூடாது. தங்களுக்குத் தாங்களே ஒவ்வொருவரும் சுயக் கட்டுப்பாடுகளை விதித்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நமக்கு நாமேதான் முதன்மையான பாதுகாப்பு. வர்த் தகர்கள் விதிமுறைகளை பின்பற்றி தங்களது வணிகத்தை செய்ய வேண்டும்.
துணிக்கடை உரிமையாளர்: வணக்கம், ராஜா ராணி டெக்ஸ் டைல்ஸ் உரிமையாளர் பேசுகிறேன். மற்ற கடைகள் மாதிரி எங்கள் கடைகளுக்கும் கொஞ்சம் தளர்வு களை கொடுத்தால் எங்களுக்கு நன்றாக இருக்கும். தமிழக அரசு என்ன விதிமுறைகளை சொல் கிறதோ, அந்த விதிமுறைகளை நாங்கள் கண்டிப்பாகக் கடை பிடிப்போம். எங்கள் டெக்ஸ் டைல்ஸ் சார்பாகவும், துணி வியா பாரிகள் சார்பாகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
முதலமைச்சர்: தளர்வுகள் தருவது முக்கியமானது அல்ல. அந்த தளர்வுகளுக்கான விதி முறைகளை சரியாக பின்பற்றியாக வேண்டும். தேநீர்க் கடைகளில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும். தனி மனித இடை வெளியைக் கடைபிடித்தாக வேண் டும். முடித் திருத்தும் நிலையங் களிலும் கட்டுப்பாடுகளை முழு மையாக கடைபிடிக்க வேண்டும். பல்வேறு விமர்சனங்கள் வரும் என்கிற நிலையிலும் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு இருக்கிறது. போலி மது, கள்ள மது போன்ற தீமைகள் தமிழ்நாட்டைச் சீரழித்து விடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்றி இயங் கும்.
கரோனா காலக் கட்டுப்பாடுகள் மீறப்படுமானால் எந்த நேரத்திலும் இந்தத் தளர்வுகள் திரும்பப் பெறப் படும் என்பதை எச்சரிக்கையாகவே சொல்லிக்கொள்கிறேன். கட்டுப் பாட்டை மீறுகிறவர்கள் தங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும். காவல்துறை கண் காணிப்பு இல்லாமலேயே கட்டுப் பாட்டோடு நடந்து கொள்கிற மக்களாக நம் தமிழ்நாட்டு மக்கள் மாறவேண்டும் என்பதுதான் என் னுடைய விருப்பம். அந்த விருப் பத்தை நம்ம மக்கள் நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்கிற நம் பிக்கையும் எனக்கு நிரம்ப இருக் கிறது. முழு ஊரடங்கிற்கு முற்றுப் புள்ளி வைப்பதுபோல நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். பொதுப் போக்குவரத்து சேவை விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். இப்படி ஒவ்வொன்றாக செயல் படுத்த வேண்டும் என்றால், அதற்கு மக்கள் துணை அவசியம். தொற்றுப் பரவலைத் தகர்க்கும் வல்லமை தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்.
நன்றி, வணக்கம்.
No comments:
Post a Comment