மருத்துவம்,உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க பேஸ்புக் நடவடிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

மருத்துவம்,உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க பேஸ்புக் நடவடிக்கை

 புதுடில்லி, ஜூன் 17  இணையத்தில் மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க உண்மை கண்டறியும் அமைப்புடன் முகநூல் நிறுவனம் கைகோர்த்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் சமூகவலைதளங்களில் போலியான தகவல்கள் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் முகநூல் நிறுவனம் சுமார் 1 கோடியே 80 லட்சம் போலியான தகவல்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து நீக்கியது. இதேபோல் சுமார் 16 கோடி தகவல்களை நம்பகத்தன்மையற்றது என வகைப்படுத்தியது. இந்நிலையில், மருத்துவம் சார்ந்த போலி தகவல்கள் பரவுவதை தடுக்க தி ஹெல்தி இந்தியன் புராஜெக்ட் என்ற உண்மை கண்டறியும் அமைப்புடன் முகநூல் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

No comments:

Post a Comment