தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் எது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

தமிழன் இல்லம் என்பதற்கு அடையாளம் எது?

நீதிக்கட்சியின் சார்பில் வாரம் இருமுறை அரையணா விலையில் 'விடுதலை' வெளிவந்தது (1.6.1935). அதன்பின் தந்தை பெரியார் அவர்களின் கையில் நாளேடாக வெளிவந்தது (10.1.1937).

இதன் ஆசிரியர்கள் புகழ்பெற்றவர்கள்.

டி..வி.நாதன், பண்டித எஸ்.முத்துசாமி பிள்ளை, .பொன்னம்பலனார், என்.கரிவரதசாமி, கே..மணி, (மணியம்மையார்), கி.வீரமணி ஆகியோர்.

பொறுப்பாசிரியர்கள் அறிஞர் அண்ணா, சா.குருசாமி, சாமி.சிதம்பரனார், கி.வீரமணி, கலி.பூங்குன்றன் ஆகியோர் ஆவர்.

'விடுதலை'யின் தொண்டு என்ன, அதன் சாதனை என்ன என்பதை மற்றவர்கள் கூறுவதைவிட, கணித்ததைவிட தந்தை பெரியார் என்ன கூறுகிறார் என்பதுதான் முக்கியமாகும்.

''பொருள் நட்டம் இருந்தாலும் 'விடுதலை'யின் பலன் அலட்சியப்படுத்தப்படக் கூடியதாக அல்லாமல், பாராட்டத்தக்கதாய் இருந்து வருகிறது என்பது அய்யமில்லை.

எப்படி எனில், ஒழுக்கக் கேடானதும், மூடநம்பிக்கைகளை வளர்க்கக் கூடியதும், தமிழ் மக்களுக்குச் சமுதாயத்திலும், அரசியலிலும், உத்தியோகத் துறையிலும் கேடளிக்கக் கூடியதுமான காரியங்களை வெளியாக்கி, அக்கேடுகளைப் போக்குவதற்காகப் பாடுபடும் பத்திரிகை 'விடுதலை', 'விடுதலை' ஒன்றே ஆகயிருப்பதால், அத்துறைகளில் அது செய்து வந்த பணி நல்ல அளவுக்குப் பயன்பட்டு வந்திருப்பதோடு, 'விடுதலை' பத்திரிகை இல்லாதிருந்தால், மேற்கண்ட துறைகளில் ஏற்படும் கேடுகளை ''ஏன்?'' என்று கேட்க நாதியேயில்லாமல் போயிருக்கும். முதலாவது 'விடுதலை'யில் வெளிவரும் செய்திகளை நமது தமிழ்நாடு அரசாங்கமும், மத்திய அரசாங்கமும், சம்பந்தப்பட்ட இலாகா அதிகாரிகளும் நல்ல வண்ணம் கவனித்து, ஒர் அளவுக்காவது பரிகாரம் செய்து வந்திருப்பதுடன், கவனம் செலுத்தும்படியான நிலையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. மற்றும் 'விடுதலை' பத்திரிகையானது மற்ற பத்திரிகைக்காரர்கள் யாரும் இருட்டடிக்கும் செய்திகளையும், வெளியிடப் பயப்படும் செய்திகளையும் தைரியமாய் வெளியாக்கி, மக்கள் கவனத்தையும், அரசாங்கக் கவனத்தையும் திருப்பும்படியாகச் செய்து வந்திருக்கிறது.

இது மாத்திரமல்லாமல், 'விடுதலை'ப் பத்திரிகையானது மற்ற எல்லா பத்திரிகைக்காரர்களையும் ஓர் அளவுக்காவது யோக்கியமாய் நடக்கும்படியும், அதிகமான அக்கிரமமும், அயோக்கியத்தனமும் செய்யவிடாமல் தடுத்தும் வந்திருக்கிறது'' ('விடுதலை', 6.6.1964) என்று தந்தை பெரியார் அவர்கள் கையொப்பமிட்டு 'விடுதலை' தலையங்கமாகவே எழுதி இருக்கிறார்.

அய்யா அவர்களின் இந்தக் கருத்துகளுக்கான விளக்கங்களையும், நடப்புகளையும் விரித்து ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறிட முடியும்.

'விடுதலை'யில் ஒன்று வந்தால், நம் இனத்தின் 'கெசட்டில்' வெளிவந்ததாகப் பொருள்படும்.

எடுத்துக்காட்டாக 'விடுதலை'யில் வெளிவந்த ''இந்தியன் பாங்கா - அக்ரகாரமா?'' என்ற கட்டுரைத் தொடரை நாடாளுமன்றத்திலேயே தி.மு.. உறுப்பினர் தா.கிருஷ்ணன் எடுத்துக்காட்டி, பேசியதுண்டு (12.5.1980). ரிசர்வ் வங்கி இதுகுறித்து ஆராய தனி அதிகாரியையும் நியமித்ததுண்டு.

''இது உண்மையா?'' என்ற தலைப்பில் 'விடுதலை'யில் வெளிவரும் பெட்டிச் செய்திக்கு மிகவும் முக்கியத்துவமும், விளைவுகளும் உண்டே!

இந்த நேரத்தில், திராவிடர் கழகம் மட்டுமல்ல - ஒட்டுமொத்தமான தமிழினமே நமது அருமைத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளது.

அவர் மட்டும் தந்தை பெரியார் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுவிடுதலை' ஆசிரியராகப் பொறுப்பேற்கத் தயங்கியிருந்தால், ‘விடுதலை' நாளேடு என்பது நிறுத்தப்பட்டு, வார இதழாக மாறியிருக்கும் (ஆதாரம்: ‘‘வரவேற்கிறேன்'' என்ற தலைப்பில் தந்தை பெரியார் அவர்களின்விடுதலை' அறிக்கை, 10.8.1962).

ஏகபோகமாக வீரமணியிடம்விடுதலை'யை ஒப்படைக் கிறேன் என்று தந்தை பெரியார் எழுதிய அந்த வரிகள் - எளிதில் எவராலும் தந்தை பெரியார் அவர்களிடம் பெற்றிட முடியாத ஏகபோகமான; விலை மதிப்பிடப்படவே முடியாத உன்னதமான மிகப்பெரும் பாராட்டும், நம்பிக்கையுமாகும்.

59 ஆண்டுக் காலம் ஒரு பத்திரிகையின் ஆசிரியர் என்ற 'கின்னஸ் சாதனை'யைப் படைத்த பெருமையும் இவருக்குண்டு.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்விடுதலை' புதுப் பணிமனையினை (இப்பொழுதுள்ள அலுவலகம்) திறந்து வைத்தபோது (1.11.1965) சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்ந்து, அதனைச் செயல்படுத்துவது அவசியமாகும். ‘‘தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல்விடுதலை' தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கச் செய்வோம்!''  என்று தவத்திரு அடிகளார் கூறியதை நினைவூட்டுகிறோம்.

1976 ஆம் ஆண்டில் நெருக்கடி நிலை என்ற நெருப்பு அமில நதியைக் கடந்து வந்த (அன்னை மணியம்மையாரின் துணிவைப் போற்றுவோம்!) ‘விடுதலை' 2020 மார்ச் முதல் கரோனா என்னும் நெருக்கடிப் புயலுக்கு மத்தியில் இணையத்தின்மூலம் மக்களைச் சென்றடைகிறது.

அச்சிடப்பட்டவிடுதலையைப் படித்த வாசகர்களை விட இணையத்தின் மூலம் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் பெருகியிருப்பது மகிழ்வைத் தருகிறது. இதற்காக அரும்பணியாற்றும் கழகத்தினருக்குப் பாராட்டு.

விடுதலை' வாசகர் அனைவருக்கும்விடுதலை'யின் 87 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்துகள்!

No comments:

Post a Comment