பூணூல் சமாச்சாரம் ஆயிற்றே!
* சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் குறித்து டில்லி மேலிடத்தில் அலசப்படுகிறது.
- ‘தினமலர்' செய்தி
>> பூணூலில் முப்புரிகளில் ஒன்று இற்று வீழ்ந்தால்கூட அய்.நா.வில் அலசுவார்களே!
கார்ப்பரேட்டுகளின் அரசுதானே!
* ஒரே மாதத்தில் பெட்ரோல் விலை 16 முறை அதிகரிப்பு.
>> வாங்கும் சக்தி அதிகரிப்புப் பார்த் தீர்களா, என்று மார்தட்டுவார்கள்.
ஆட்சியே சவால்தான்!
* கரோனா - 2 ஆவது அலையில் ஆக்சிஜன் விநியோகம் சவாலாக இருந்தது. - பிரதமர் மோடி
>> அப்பாடா, ஓர் உண்மையை முதன் முதலில் ஒப்புக்கொண்டு விட்டார்.
முதல்வர் அல்லவா
* 'We Stand with Stalin' என்ற ஹேஸ்டேக் உலக அளவில் 4ஆம் இடத்தையும், இந்திய அளவில் முதல் இடத்தையும் பிடித்தது.
>> இது என்ன, இன்னும் இருக்கிறது.
காலம் மாறுது!
* தனது வாகனத்தை சாலை ஓரம் நிறுத்தி ஆம்புலன்சுக்கு வழி விட்டார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
>> மு.க.ஸ்டாலின் செல்வி ஜெயலலிதா அல்லவே!
ப்பூ... இவ்வளவு தானா?
* ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 90அய்க் கடந்தது.
>> செஞ்சுரி அடித்தால் சாதனை தானே!
பெயர்களில் என்ன இருக்கு?
* இந்தியாவில் உருமாறிய கரோனா வுக்கு ‘டெல்டா' 'காப்பா' என்று பெயர்கள் சூட்டல்.
>> வைரசை ஒழிக்க வழி பாருங்கய்யா!
சரிவில் ஒரு சாதனைதானே!
* இந்தியப் பொருளாதாரம் 7.3 விழுக்காடு சரிவு - தேசிய புள்ளியியல் நிறுவனம் தகவல்
>> ஆட்சியின் சரிவுக்கு ஆரம்ப நிலையே!
மூன்று சதவிகித மக்களுக்கான ஆட்சிதானே!
* ஊரடங்கால் 97 விழுக்காடு இந்தியர்களுக்கு பொருளாதார நெருக்கடி
- ராகுல்காந்தி
>> கூட்டிக் கழிச்சிப் பாருங்க - எல்லாம் சரியாக இருக்கும்.
தலைக்குமேல் தொங்குகிறது
* புதுச்சேரி மாநில அரசில் பா.ஜ.க.வுக்கு சபாநாயகர் மற்றும் இரு அமைச்சர்கள்.
>> சபாநாயகர் பதவியா - என்.ஆர். காங்கிரசுக்குத் தலைக்கு மேல் தொங்கும் கொடுவாள்.
ஓ, அந்த சோடா பாட்டில் புகழ் வீரரா?
* கரோனா தொற்று அகல கோயில்களில் சிறப்பு யாகப் பூசைகள்.
- சிறீவில்லிபுத்தூர் ஜீயர்
>> பார்ப்பனர் வயிற்றில் அடித்துக் கட்டப்பட வேண்டாமா?
கடவுளைக் காப்பாற்றுங்கோ?
* மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கருவறையில் தீ விபத்து!
>> அக்னி பகவான் அபிஷேகமோ!
No comments:
Post a Comment