உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு
ஜெனிவா,
ஜூன்2- இந் தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உரு மாறிய கரோனா வைர ஸுக்கு இந்தியாவின் பெயரை முதலில் வைத்து அழைக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதற்கு இரு புதிய பெயர்களை உலக சுகாதார அமைப்பு நேற்று அறிவித்துள்ளது. இதன் படி இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய பி.1.617.1 வகை வைரஸுக்கு “கப்பா” (Kappa) என்றும், 2ஆவதாக கண்டறியப்பட்ட பி.1.617.2 வைரஸுக்கு “டெல்டா” (Delta) என்றும் உலக சுகாதார அமைப்பு பெய ரிட்டுள்ளது.
உலக
சுகாதார அமைப் பின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “உருமாறிய கரோனா வைரஸை எளி தாகக் கண்டறியும் வகை யில், அடையாளப்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. ஆனால், அதன் அறிவியல் பூர்வமான பெயர் மாற வில்லை. பொதுத் தளத்தில் விவாதிக்கவும், அடையா ளப்படுத்தவும் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்படி பி.1.617.1 வகை வைரஸுக்கு 'கப்பா' என் றும் பி.1.617.2 வகை வைர ஸுக்கு 'டெல்டா' என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு வைரஸ்களும் முதன்முதலில் இந்தியாவில் தோன்றியவை” எனத் தெரிவித்துள்ளார். மேலும், உரு மாறிய வைரஸ் ஒன்றையும் கிரேக்க எழுத்துகளான ஆல்ஃபா, பீட்டா, காமா ஆகிய வடிவத்தில் குறிப் பிடும்போது எளிதாக அடையாளப்படுத்தவும் முடியும், அதைக் குறிப் பிட்டுப் பேசவும் முடியும் என உலக சுகாதார
அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன்படி
பிரிட்டனில் முதன் முதலில் கண்டறி யப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் பி.1.1.7 வைரஸை "ஆல்ஃபா" என் றும், தென் ஆப்பிரிக் காவில் கண்டறியப்பட்ட பி.1.351 வைரஸுக்கு ''பீட்டா'' என் றும், பிரேசிலில் கண்டறியப் பட்ட வைரஸுக்கு "காமா" என் றும் பெயரிடப்பட்டுள் ளது. இந்தியாவில் கண்ட றியப்பட்ட இரு வைரஸ் களுக்கு "கப்பா" என்றும், "டெல்டா" என்றும் பெயரி டப்பட்டுள்ளது. இந்தப் புதிய பெயர்கள் எளிதாக அடை யாளப்படுத்திக் காட்டும் என்றாலும், இதன் அறிவியல்ரீதியான பெயர்கள் மாறாது என உலக சுகாதார
அமைப்பு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment