தாமிரபரணி நாகரிகம்
தாமிரபரணி
நாகரிகத்தை காட்சிப்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் தங்கம்
தென்னரசு அறிவிப்பு.
பாலூட்டும்
தாய்மார்களுக்கு
பாலூட்டும்
தாய்மார்களுக்கு 3 ஆம் நாளே தடுப் பூசி போடலாம் என்கிறார் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் விஜயா.
காவிரி
ஆணைய கூட்டம்
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் கோரிக்கையை
ஏற்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை வரும் 22 ஆம் தேதியன்று நடத்த ஒன்றிய அரசு உத்தரவு.
தனித்தனியே!
தமிழ்நாட்டில்
காலியாக உள்ள 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலைத் தனித்தனியாக நடத் திட தி.மு.க.
சார்பில் வலியுறுத்தல்.
வங்க
அரசியல்
திரிணாமுல்
காங்கிரசை உடைக்க பா.ஜ.க.
திட்டம் தீட்டியது - இப்பொழுது எதிர்விளைவை ஏற்படுத்தி விட்டது. பா.ஜ.க.
எம்.எல்.ஏ.,க்கள் திரிணாமுல்
பக்கம் தாவும் நிலை!
குற்றப்பத்திரிகை
நீதிபதிகளைத்
தரக் குறைவாகப் பேசிய எச்.ராஜா (பா.ஜ.க.)மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.
12 ஆம்
வகுப்புத் தேர்வு
12 ஆம்
வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு முறையை உச்சநீதிமன்றம் ஏற்பு.
நடைமேடைக்
கட்டணம்
சென்னை,
எழும்பூர், சென்ட்ரல் ரயில் மேடைக் கட்டணம் (பிளாட்பார்ம்) ரூ.50 - வரும் செப்டம்பர் 16 ஆம் தேதிவரை.
‘டான்ஸ்'
பாபா சிறையில்!
பாலியல்
குற்றவாளி சிவசங்கர் பாபா சிறையில் அடைப்பு.
புகார்
தெரிவிக்கலாம்
சிவசங்கர்
பாபா குறித்து தொலைப்பேசி வழி புகார் தெரிவிக்கலாம். எண் 98405 58992 / 98406
69982.
No comments:
Post a Comment