வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், ‘நீட்’ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்

பிரதமர் மோடியிடம், முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் கோரிக்கை

சென்னை, ஜூன் 18 தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வேலை வாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி யிடம், முதல்-அமைச்சர் மு..ஸ்டாலின் நேரில் வலியுறுத்தி மனு அளித்தார்.

டில்லியில் பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் மு..ஸ்டாலின் நேற்று (17.6.2021) சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் வளர்ச்சித்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் மு..ஸ்டாலின் வழங்கினார். அதன் விவரம் வருமாறு:-

நீர்வள விவகாரங்கள்

* கருநாடகாவில் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது.

* முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்ட உயர்வை 152 அடியாக உயர்த்த வேண்டும்.

* தீபகற்ப நதிகளான கோதாவரி - காவிரி, காவிரி - குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும்

கச்சத்தீவு

* பாக் நீரிணை பகுதியில் இந்திய மீனவர்கள் சென்று மீன்பிடிப்பதற்கான பாரம்பரிய உரிமையை உறுதி செய்வதோடு, அவர்களின் பாதுகாப்பிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கச்சத்தீவை மீட்பதோடு, அங்கு தமிழக மீனவர்கள் சென்று மீன்பிடிக்கும் உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

* மீனவர்களின் நலனுக்காக தேசிய ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

* இலங்கை தமிழர்களுக்கு சமமான அரசியல் மற்றும் வாழ்வுரிமைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழக அரசுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி. உள்ளிட்ட பாக்கித் தொகைகளை வழங்க வேண்டும்.

நீட்உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் கைவிட வேண்டும்

* நீட் என்ற மருத்துவ கல்விக்கான தகுதித் தேர்வையும், மற்ற கல்வி சேர்கைக்கும் வைக்கப்பட உள்ள நுழைவுத் தேர்வுகளையும் கைவிட வேண்டும்.

* கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தோற்றுவிக்க வேண்டும்.

* தமிழகத்திற்கு தேவையான கரோனா தடுப்பு மருந்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

* லிப்போசோமால் ஆம்போடெரிசின் பி போன்ற உயிர் காக்கும் மருந்துகளை தேவையான அளவில் வினியோகம் செய்ய வேண்டும்.

* மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை கல்வி மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை அனுமதிக்க வேண்டும்.

வேளாண்மை

* வேளாண்மை தொடர்பான 3 சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும்.

* நெல் அரவை மானியத்தொகையை தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும்.

தொழிற்சாலை கோரிக்கை

* செங்கல்பட்டு எச்.எல்.எல். பயோடெக் மையம், குன்னூர் பாய்ச்சர் மய்யம் ஆகிய இடங்களில் கரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை உடனடியாக தொடங்க வேண்டும்.

பள்ளிக்கல்வி

* தேசிய கல்விக்கொள்கையை திரும்பப் பெற வேண்டும்.

தமிழ் வளர்ச்சி

* தமிழை இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.

* தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

பிற்படுத்தப்பட்டோர் நலன்

* பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினரை அடையாளம் காண்பதற்காக உள்ள வருமான உச்சவரம்பை திரும்பப் பெற வேண்டும்.

* மிகவும் பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மாநில அரசுகளே மாநில தொகுப்பில் ஒதுக்கீடுகளை வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

* சேதுசமுத்திரம் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

நீதித்துறைவிமான நிலையம்

* சென்னையில் உச்சநீதமன்றத்தின் கிளையை உருவாக்க வேண்டும்.

* சென்னையில் உலகத் தரம் வாய்ந்த புதிய பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.

* மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும்.

* சேலம் மற்றும் தூத்துக்குடியில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதோடு அவற்றை நவீனப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு

* மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கு வழிவகை செய்யும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

* ஊரகப் பகுதியில் மகாத்மா காந்தி வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் பணியாற்றுவோர் 150 நாட்கள் பணியாற்ற வழிவகை செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

* நகர்ப்புற வேலை வாய்ப்பு ஊதிய திட்டத்தை தொடங்க வேண்டும்.

* தமிழகத்திற்கான புதிய ரயில்வே திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

* குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

* சென்னையில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

* ஹைட்ரோகார்பன் மற்றும் நியூட்ரினோ தொடர்பான திட்டங்களை கைவிட வேண்டும்.

* சுற்றுப்புறச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணை - 2020-அய் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment