டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா சாடல்
புதுடில்லி,ஜூன்15 மாநிலங் களுக்கு எதிராக அதிகார அத்து மீறல் செய்வதைத் தவிர, ஒன்றிய அரசு வேறெந்த வேலையும் பார்ப்பது கிடையாது என, டில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டியுள் ளார்.
டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, ரேசன் பொருள்களை வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கும் திட் டத்தை அறிவித்தது. ஆனால், ஒன்றிய பாஜக அரசு அனுமதி மறுத்துவிட்டதால், அத்திட் டத்தை டில்லி அரசால் செயல் படுத்த முடியவில்லை.
இவ்விவகாரத்தில் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும், பீட்சா, பர்கரை வீட்டுக்கே சென்று வழங்கும் போது, ரேசன் பொருள்களை வழங்க முடியாதா என்று கேள்வி எழுப்பியும் இதுவரை ஒன்றிய அரசு அதற்கு பதிலளிக்கவில்லை. ‘டில்லி அரசின் அறிவிப்பு முற் றிலும் மோசடியானது’ என ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விமர்சனத் துடன் நிறுத்திக் கொண் டார். இந்நிலையிலேயே, ஆம் ஆத்மி மூத்தத் தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா காணொலி வாயிலாக செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “பாரதிய ‘ஜனதா’ கட் சியைத் தான் தேர்தலில் மக்கள் தேர்ந்தெடுத்தனரே தவிர, பார திய ‘சண்டை’ கட்சியை அல்ல!” என்று கூறியுள்ளார்.
மேலும், “மாநில அரசுகளுடன் ஒன்றிய அரசு இணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர, அவற்றின் பணியில் தலையிடக் கூடாது.
ஆனால், மாநில அரசுகளுக்கு எதிரான அதிகார அத்துமீறலைத் தவிர, ஒன்றிய அரசு வேறெந்த வேலையும் பார்ப்பது இல்லை!” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment