மத்திய அரசு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்கவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

மத்திய அரசு இலவசமாக கரோனா தடுப்பூசிகளை வழங்கவேண்டும்

 கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திருவனந்தபுரம்,ஜூன்4 பன்னாட்டளவில் கோவிட் 19 கரோனா வைரஸ் பரவல் தடுப் புக்கான  நடவடிக்கை, அதற்கான கட்டுப்பாடுகள்,  ஊரடங்கு, தளர் வுகள் என ஓராண்டுக்கும் மேலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள், ஊரடங்கு உள் ளிட்ட கட்டுப்பாடுகளால் தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டு, புலம்பெயர் தொழிலா ளர்கள் உள்பட தொழிலாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடிக் குள் தள்ளப்பட்டு வருகின்றனர். கரோனா தொற்று பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள அனைவருக்கும் தடுப்பூசி என்பது ஒன்றே தீர்வு என்கிற நிலையில் பன்னாட்ட ளவில் பல்வேறு மருத்துவ அறிவியல் நிறுவனங்கள் மேற்கொண்ட தொடர் ஆராய்ச்சிகளின் முடிவில் கோவிட்ஷீல்டு, கோவாக்சின், மாடர்னா, ஸ்புட்னிக்  என தடுப் பூசிகள் பன்னாட்டளவில் செலுத் தப்பட்டு வருகின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து கொண்டி ருக்கின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதுபோல் கேரளாவிலும் கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி களை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரி தீர்மானம் கேரள சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் (2.6.2021)  ஒருமனதாக நிறைவேற் றப்பட் டுள்ளது.

கேரள மாநில சுகாதார அமைச் சர் வீணா ஜார்ஜ் கேரள சட்டமன் றத்தில் இந்த தீர்மானத்தை முன் வைத்தார். இதையடுத்து அவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. மேலும் மத்திய அரசிடம்  தடுப்பூசிகளை சரியான நேரத்தில் விநியோகிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. முன்ன தாக இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி யிருந்தார். அதேபோன்று மற்ற மாநிலங்களும் மத்திய அரசு இல வச தடுப்பூசி தர வலியுறுத்துமாறு கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment