உரத்தநாடு ஒன்றியம் பூவத்தூர் கழக செயல்வீரர் பூவை. உ.முருகேசன் உடல்நலக் குறைவால் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் நேற்று (19.6.2021) காலமானார். மாலை பூவத்தூரில் உடலடக்கம் செய்யப்பட்டது. தமிழர் தலைவர் தொடர்பு கொண்டு தமது ஆழ்ந்த இரங்கலை அவரது சகோதரி உள்ளிட்ட உறவினர்க ளுக்கு தெரிவித்திட பணித்தார்கள்.
மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழகப் பேச்சாளர் இரா.பெரியார்செல்வம், மாநில பெரியார் வீரவிளையாட் டுக் கழக செயலாளர் நா.இராமகிருட்டிணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.இராமசாமி, உரத்தநாடு ஒன்றியத்தலைவர் த.செகநாதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.விசயகுமார், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் ஆட்டோ ஏகாம்பரம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மேற்கு பகுதி செயலாளர் புலவர் இரா.மோகன், பேரா.குட்டிமணி, ச.பெரியார் மணி, பூவத்தூர் மேனாள் ஊராட்சிமன்றத் தலைவர் சன்முகம், பிரசன்னா, நெடுவை கிளைக்கழக தலைவர் கு.லெனின் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
No comments:
Post a Comment