இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும்

விஞ்ஞானிகள் எச்சரிக்கை

புதுடில்லி, ஜூன் 20- பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், இந்தியா வில் கரோனா 3-வது அலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக உலகெங்கிலும் உள்ள சிறந்த சுகாதார நிபுணர் கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள் என 40 பேரிடம் கருத்து கேட்டது.

அதன்படி, இந்தியா வில் கரோனா 3-ஆவது அலை அக்டோபர் மாதத் தில் வீசக்கூடும் என பெரும்பாலானோர் கூறியுள்ளனர். சிலர் ஆகஸ்டு, செப்டம்பர் மாதத்தில் வரக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

ஆனால் 2-ஆவது அலையை விட 3-ஆவது அலை மத்திய, மாநில அரசுகளால் திறம்பட கையாளப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துவிடும் என்பதால் இயற்கையா கவே பொதுமக்களிடத் தில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும் என்று டில்லி எய்ம்ஸ் மருத்து மனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

3-வது அலை, 18 வய துக்கு உட்பட்டவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப் பட்டு வருவதில் விஞ்ஞானிகள் மாறுபட்ட கருத்தை தெரிவித்துள்ள னர். 40 பேரில் 14 பேர், ஆபத்து பொதுவானது தான் என கூறியுள்ளனர். மேலும் இந்த கரோனா அச்சுறுத்தல் குறைந்தது ஓராண்டு நீடிக்கும் என 30 பேர் கருத்து தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment