திராவிட சமுதாயத்தின் பேராயுதமான தந்தை பெரியார் அவர்கள், தமது அறிவுப் பட்டறையில் வார்த்தெடுத்துத் தந்த போராயுதம்தான் இன்று (1.6.2021) 87 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை' நாளேடு என்ற ஏவுகணை!
இந்த
கரோனா தொற்று காலத்தில் பல பெரிய நாளேடுகளும்
தவித்து திகைத்த நேரத்தில், தொய் வின்றி தனது அறிவுப் போரை நாளும் தொடர்ந்த வாளேடு இந்த நாளேடு - ‘விடுதலை!'
அதற்காக
ஆதரவுக்கரம் நீட்டி, புது உத்தியாம் பி.டி.எஃப்.
(PDF) மூலம் பல லட்ச வாசகர்களை
ஈர்த்து, புது வகைப் பாய்ச்சலை ஏற்படுத்திடக் காரணமான திராவிட இயக்க உறவுகளுக்கும், புதிய வரவுகளுக்கும் எமது தலைதாழ்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.
‘‘திராவிடம்
வெல்லும் - நாளைய வரலாறு இதைச் சொல்லும்'' என்ற முழக்கத்தினை செயல் படுத்தி - பொதுத் தேர்தல் நேரத்திலும் அது வென்றது!
அதில்
விடுதலையின் மறக்க முடியாதது!
ஆயிரம்
மேடு பள்ளங்களும், வளைவுகளும், சுளிவுகளும், ஆங்காங்கே இருந்தாலும், வற்றாத ஜீவ நதியாக ஓடி, அறிவுத் தாகம் தீர்த்து, அளப்பரிய அறிவு விளைச்சலுக்கு நீர் பாய்ச்சி கதிர்களை களத்து மேட்டிற்குக் கொண்டு வருவதற்குக் காரணமான வாசகர்களே, கடமையாற்றும் ‘விடுதலை' பணித் தோழர்களே, உங்கள் உழைப்புக்கும், உற்சாகத்திற்கும் எப்படி நன்றியைக் கூறுவது?
59 ஆண்டு
அனுபவத்தில், பல புதிய பரிமாணங்களுக்குக்
காரணமான அனைவருக்கும் நன்றி! நன்றி!!
‘விடுதலை'யின்றேல் எவரே வாழ்வர்?
‘விடுதலை'
தொண்டால் எவரே தாழ்வர்?
உயர்வால்,
உயர்வீர்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.6.2021
No comments:
Post a Comment