விருத்தாசலம் கழக மாவட்டம், கம்மாபுரத்தில் 17.6.2021 அன்று காலை 11 மணி அளவில் டி.செல்வன் தாயாரும் கழகத் தோழர் கோ.ஆனந்தன் சகோதரியுமான தே.கலி அம்மாள் (வயது 91)அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி திமுக மாவட்ட பிரதிநிதி கம்மாபுரம் மேனாள் ஊராட்சித் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அம்மையாரின் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார் . இந்நிகழ்வில் குறிஞ்சிப்பாடி ஒன்றிய அமைப்பாளர் சேகர்
கோபுராபுரம் கோ ஆனந்தன், கோ.பாண்டுரங்கன், ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். மேனாள் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டுரங்கன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment