அழகிய பெரியவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

அழகிய பெரியவன்

 அழகிய பெரியவன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ஒரு நூல் "சாதிய தேசியப் போர்" என்பதாகும். 46 பக்கங் களைக் கொண்டது.

"தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத் கரும் சுதந்திரப் போராட் டத்துக்கு எதிராக நின்ற வர்கள், சுதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் உள்நாட்டில் நிலவும் ஜாதிய அடக்கு முறைகள், ஏற்றத் தாழ் வுகள், ஆதிக்க ஜாதிகள் பற்றிப் பேசினார்கள்" என்று குற்றஞ் சாட்டு வோர் இன்று வரை உண்டு.

எல்லோரும் விடுதலை விடுதலை என்று கூறிக் கொண்டி ருந்த போது  - விடு தலைக்குப் பிறகு, என்ன நடக்கும், என்ன நடக்க வேண்டும் என்பதைப் பேசியவர்கள் அம் பேத்கர், பெரியார் உள் ளிட்ட மிகச் சிலரான சமூக மாற்றத்திற்காக உழைத்த தலைவர்களே!

இதுகுறித்து அண்ணல் அம்பேத்கர் என்ன கூறுகிறார்?

"இந்தியா என்ற உருவாகாத தேசியத்தை ஆளுகிற வெள்ளை அரசு போன பிறகு, அதன் ஆட்சிப் பீடம் ஆளும் (ஜாதிய) வர்க் கத்திற்குள்தான் போகும். அப்படியெனில் இரு அரசுகளுமே ஒன்றுதான்!" என்றார் அம்பேத்கர். "ஆளும் அரசு, ஆளப் போகும் அரசு என்ற இந்த இரு எதிர்மைகள், ஏகாதி பத்தியம், காலனியம், ஜாதியம் என்ற அடிப் படையில் ஒரே தன்மை களைக் கொண்ட போலி எதிர்மைகள்" என்றார் அண்ணல் அம்பேத்கர் ('சாதிய தேசியப் போர்' பக்கம் 29)

இதே கருத்தை வேறு சொற்களில் தந்தை பெரியார் என்ன கூறு கிறார்?

while Speaking at a public Metting at Salem E.V. Rama samy Naiker Said that they must Settle the Brahmin Question Even while the British Supremacy lasted, otherwise they would Have to suffer under the Tyranny of what he called Brahminocracy. (A Hundred years of The 'Hindu' page: 337).

"வெள்ளைக் காரர்கள் ஆட்சியில் இருக்கும்போதே பார்ப்பனர் ஆதிக்கத் தன்மை குறித்த பிரச் சினைக்கு ஒரு முடிவு காண வேண்டும்; இல்லையெனில் வெள் ளைக்காரர்கள் வெளி யேறிய இந்நாட்டில் ஜனநாயகம் இருக்காது; பிராமணநாயகம் தான் இருக்கும் என்று .வெ.ரா. கூறினார்" என்கிறது 'இந்து ஏடு' வெளியிட்ட நூற்றாண்டு நிறைவு நூல்!

பெரியாரும் - அம் பேத்கரும் ஒரு நாணயத் தின் இரு பக்கங்கள் என்பது புரிகிறதா?

- மயிலாடன்

No comments:

Post a Comment