எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அலட்சியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

எய்ம்ஸ் மருத்துவமனை : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அலட்சியம்

மதுரை, ஜூன் 20 மதுரையில் எய்ம்ஸ் மருத் துவமனை கட்டுமானத் திற்கான டெண்டர், விரிவான திட்ட மதிப்பீடு தொடர் பாக ஆர்.டி.அய்.இல் 12 கேள் விகள் கேட்கப்பட்டன. ஆனால் மத்திய சுகா தாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒற்றை பதிலை மட்டுமே தந்திருப்பது அதிர்ச்சி யளிப்பதாக சமூக ஆர்வ லர்கள் குற்றம் சாட்டுகின் றனர்.

தமிழகத்தில் 2015இல் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி தரப் பட்டு, மூன்றாண்டுகளுக்கு பிறகு  2018இல் மதுரை தேர்வு செய்யப்பட்டு அறி விக்கப்பட்டது. தொடர்ந்து 2019, ஜன. 27இல் மதுரையில்  எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 45 மாதங்களில் பணிகள் முடிக்கப்படுவதாக அறி விக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி 29 மாதங்கள் கடந்தப் பிறகும் கட்டு மானப்பணிகள் இது வரை துவக்கப்பட வில்லை.

தென்காசி மாவட் டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா, ஆர்.டி.அய். மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு 12 கேள்விகள் அனுப்பி இருந் தார். அதாவது, டெண் டர், விரிவான திட்ட மதிப்பீடு தொடர்பாக இரு நிலைகளில் இந்த கேள்விகள் கேட்கப்பட் டிருந்தன.   இதன் படி, ‘‘டெண்டர் விடுவ தற்கு ஒப்புதல் அளிக் கப்பட்ட தேதி? டெண் டர்  ஓரிரு கட்டமா அல்லது பல கட் டங்களாக விடப்படு கிறதா? பல கட்டம் எனில் ஒவ்வொரு டெண்டரின் மதிப்பு என்ன? எத்தனை மாதங் களில் டெண்டர் நடை முறைகள் முடிக்கப் படும்? டெண்டரின் தற் போதைய நிலை என்ன? டெண்டர் சம்பந்தமாக என்னென்ன பணிகள் நடக்கின்றன? அந்த பணி களின் தற்போதைய நிலை என்ன? மதுரை எய்ம்ஸ் மருத்துவம னையின் ஒரு டெண்டரை இறுதி செய்வதற்குரிய கால அவகாசம் எத்தனை நாட்களென  நிர்ணயிக் கப்பட்டுள்ளது?

பணியை மேற் கொள் ளும் நிறுவனத்திற்கு, பணியை தொடங்குவதற் கான அனுமதி கடிதம் எந்த தேதியில் வழங்கப் படும்? திருத்தப்பட்ட விரிவான திட்ட மதிப்பீடு என்ன? விரிவான திட்ட மதிப்பீட்டை சமர்ப் பிக்கும் தேதி? என்ன மாதிரியான பணிகள் மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கப் பட்டுள்ளது..’’ இப்படி யாக மொத்தம் 12 கேள் விகளாக பிரித்து கேட்டி ருந்தார்.  இதற்கு தற்போது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத் திடம் இருந்து பதில் வந்துள்ளது. இதில், ‘‘டெண்டர் மற்றும் விரிவான திட்ட மதிப்பீடு சம்பந்தமான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில், பகுதியாக இந்த தகவல்களை பகிர இயலாது’’ என ஒற்றை பதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

இதுகுறித்து மதுரை மக்கள் கூறும்போது, ‘‘நிரந்தர கட்டடங்களுக் கான பணி துவங்கும் தேதியை உடனடியாக அதிகாரிகள் வெளிப் படையாக அறிவிக்க வேண்டும். டெண்டர் நடைமுறைகளை விரை வில் முடித்து இந்த பணிகளை துவங்கி னால்தான் மதுரை உள் ளிட்ட தென்மாவட்டத் தினருக்கு பயனுள்ளதாக அமையும். தற்காலிக கட் டடங்களை கட்டுவதற் கென முதல்வர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு கிறார். எனவே அதிகா ரிகள் இனியும் காலதா மதம் ஏற்படுத்தாமல் விரைவில் பணி தொடங்க வேண் டும்’’ என்கின்றனர்.

No comments:

Post a Comment