மதுரை, ஜூன் 4- மதுரையில் ரூ.60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித் துக் கொண்டு வந்தாலும் தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் தமிழக அரசு செய்து கொண்டு வருகின்றது. தமிழ்நாட்டில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி, தென் சென்னையில் ரூபாய் 300 கோடி மதிப்பில் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்க தமிழ் நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து மதுரையில் ரூபாய் 60 கோடியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் அமைக்கவும், திருவாரூரில் ரூபாய் 24 கோடியில் 11 இடங் களில் 16000 டன் நெல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment